Creative Catalyst Fellowship அறிமுகம்: புத்தாக்க செயற்பாடுகளுக்கான இலங்கையின் முதலாவது தலைமைத்துவ மற்றும் புத்தாக்க நிகழ்ச்சி அறிமுகம்
கொழும்பு, இலங்கை, மே 2024 – The Creative Catalyst Fellowship (CCF) ஐ கொழும்பிலுள்ள ட்ரேஸ் எக்ஸ்பேர்ட் சிற்றியில் அறிமுகம் செய்துள்ளதாக Good Life X (GLX) அறிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்திப் பிரிவான சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் முகவரமைப்பு (USAID) இந்தத் திட்டத்துக்கு நிதியளிப்பதுடன், சமூகப் பிரச்சனைகளுக்கு புத்தாக்கமான தீர்வுகளை காணல், விழிப்புணர்வை ஏற்படுத்தல், வளங்களை பரவலடையச் செய்தல் மற்றும் நேர்த்தியான மாற்றத்துக்கு ஊக்குவித்தல் போன்றவற்றில் புத்தாக்கத்தின் வலிமையை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளது.
USAID/இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஆளுகை மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கான அலுவலக பணிப்பாளர் அஸ்டா சின்போ அறிமுக உரையின் போது, “இலங்கை, பிராந்தியம் மற்றும் உலகம் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றன. இவற்றில் எமது காலநிலையையும் சூழலையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது அடங்கியுள்ளது. எமக்கு புதிய தீர்வுகள் தேவைப்படுகின்றன. நேர்த்தியான மாற்றத்துக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை வடிவமைப்பது மற்றும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த பத்து அங்கத்தவர்களை முதல் குழுவில் இணைத்துக் கொண்டு ஆதரவளிக்க முன்வந்துள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அடுத்த ஆண்டில் Creative Catalyst Fellowship இன் பெறுபேறுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றோம்.” என்றார்.
7 மாத கால பயிற்சிகாலப்பகுதியில், பயிலுநர்களுக்கு வழமையான விடயங்களுக்கு முகங்கொடுத்து, மாற்றத்தை வலியுறுத்துவர். Thematic cohortகள் இந்த ஆண்டு காலநிலை தொடர்பிலும், நிலைபேறாண்மை தொடர்பிலும் செயலாற்றுவதுடன், ஆரம்பித்து, அங்கத்தவர்களுக்கு பங்களிப்பு வழங்குவதற்கான வாய்ப்புகளை வழங்கி, இலங்கையின் எதிர்காலத்தில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பளிக்கின்றது. ஒரே விதமான தலைப்புகளின் கீழ் கைகோர்ப்புகளினூடாக, உள்நாட்டு சவால்களுக்கு பொருத்தமான நிலைபேறான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் புத்தாக்கமான நிபுணர்கள் சமூகத்தை உருவாக்குவதை இந்த நிகழ்ச்சித் திட்டம் எதிர்பார்க்கின்றது.
CCF நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம்மா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், நிகழ்ச்சித் திட்டத்தின் கட்டமைப்பு பற்றிய மேலோட்டமான விளக்கத்தை வழங்கியிருந்தார். இதில், வதிவிடநிகழ்ச்சித்திட்டம், உன்னிப்பான ஆலோசனை வழங்கல் மற்றும் fellowship நிறைவில் கண்காட்சி போன்றன பற்றிய விபரங்கள் அடங்கியிருந்தன. GLX இன் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரந்துலா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “ஒழுக்க இடைவெளிகளை சீராக்குவதுடன், சிந்தனைகளை பிரித்தெடுத்து, செயலாற்றக்கூடிய முன்னேற்றங்களாக மாற்றுவது, காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றை இணைத்து முன்நோக்கி செல்லும் வழிமுறையை வழங்குவது மற்றும் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள உதவுவது போன்றவற்றை புத்தாக்கத்திறன் வழங்குகின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது முன்னெடுப்பின் நோக்கம் இதுவாகும்.” என்றார்.
அறிமுக நிகழ்வில் GLX இன் எம்மா டி சில்வா, USAID ஆதரவளிக்கும் PRO-INFO செயற்திட்டத்தின் அனுகி பிரேமசந்திர, விளக்கமளிப்பவர், காட்சி வடிவமைப்பாளர் மற்றும் அறிவூட்டுபவராக இருஷி தென்னகோன் மற்றும் The Pearl Protectors இன் ஸ்தாபகரும் ஒழுங்கிணைப்பாளருமான முதித கட்டுவாவல ஆகியோர் குழுநிலை கலந்துரையாடலில் ஈடுபட்டனர். காலநிலை-நேர்த்தியான இலங்கையை கட்டியெழுப்புவதில் நேர்த்தியாக பங்களிப்பு வழங்கக்கூடிய வகையில் இலங்கையின் புத்தாக்க சமூகத்தார் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி இந்த குழுநிலை கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த ஆண்டின் cohort க்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. நேர்த்தியான மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறை கொண்டுள்ள, கலை, டிஜிட்டல் கலை, புகைப்படக்கலை, திரைப்படம், கைவினைப்பொருட்கள், இயல்கலை, எழுத்தாக்கம், கேமிங், கவிதை மற்றும் மட்பாண்டங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த புத்தாக்கமானவர்களை இந்த நிகழ்ச்சித் திட்டம் எதிர்பார்க்கின்றது. Fellowship பற்றிய மேலதிக தகவல்களை goodlifex.com/glx-program/ccf-climate-positive/ எனும் பக்கத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக புதிய தகவல்களுக்கு Facebook, Instagram, LinkedIn மற்றும் Twitter ஆகியவற்றில் @inspire.with.ccf ஐ தொடரவும். நிகழ்ச்சியின் பிரத்தியேகமான சமூக ஊடக பக்கங்களினூடாக Creative Catalyst Fellowship அடிக்கடி மெருகேற்றப்படும்.
இலங்கையில் ஜனநாயக மற்றும் ஏற்புத்தன்மையான ஊடக சூழலுக்கு ஆதரவளிப்பதற்காக, USAID ஸ்ரீ லங்காவினால் நிதியளிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் நேர்த்தியான தகவல்களை ஊக்குவித்தல் (PRO-INFO) செயற்பாடு இந்த திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றதுடன், சிவில் சமூக மற்றும் ஊடக வலிமைப்படுத்தல் ஒன்றிணைவு மற்றும் புதிய வழிகளில் முன்னேறல் (CSM-STAND) பொறிமுறை IREX இனால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
தெற்காசிய பிராந்தியத்தில் புதிய வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவதற்கான புத்தாக்கம் மற்றும் அபிவிருத்தி வழிமுறைகளை கொண்ட அமைப்பாக Good Life X (GLX) திகழ்கின்றது. தமது தீர்வுகளினூடாக, மீளுருவாக்கம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஆரம்பநிலை நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு துரித முன்னேற்றத்துக்கு அவசியமான அறிவையும் நிபுணத்துவத்தையும் இந்நிறுவனம் வழங்குகின்றது.
முற்றும்
படங்கள்:
1. Creative Catalyst Fellowship இன் வளவாளர்கள் (இடமிருந்து): ஸ்தாபகர், The Pearl Protectors – முதித கட்டுவாவல, IREX/ PRO-INFO இன் பதில் பிரதம அதிகாரி – அனுகி பிரேமசந்திர, விளக்கமளிப்பவர் – இருஷி தென்னகோன் மற்றும் நிகழ்ச்சி முகாமையாளர், Creative Catalyst Fellowship, Good Life X – எம்மா டி சில்வா.

2. USAID/இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஆளுகை மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கான அலுவலக பணிப்பாளர் அஸ்டா சின்போ வரவேற்புரையை நிகழ்த்துகின்றார்.

3. PRO-INFO, IREX இலங்கையின், IREX செயற்திட்ட பணிப்பாளர் – ஜீன் மெக்கென்சி நிகழ்ச்சித்திட்டம் பற்றி தமது கருத்துகளை பகிர்ந்து கொள்கின்றார்.

4. Good Life X இன் ஸ்தாபகரும் பணிப்பாளருமான ரந்துலா டி சில்வா மற்றும் Good Life X, Creative Catalyst Fellowship நிகழ்ச்சி முகாமையாளர் எம்மா டி சில்வா ஆகியோர் நிகழ்ச்சித் திட்டத்தின் இலக்குகள் மற்றும் வழங்கப்படும் அம்சங்கள் பற்றிய விளக்கங்களை வழங்குகின்றனர்.

PRO-INFO பற்றி
இலங்கையில் ஜனநாயக மற்றும் ஏற்புத்தன்மையான ஊடக சூழலுக்கு ஆதரவளிப்பதற்காக, USAID ஸ்ரீ லங்காவினால் நிதியளிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் நேர்த்தியான தகவல்களை ஊக்குவித்தல் (PRO-INFO) செயற்பாடு இந்த திட்டத்துக்கு ஆதரவளிக்கின்றதுடன், சிவில் சமூக மற்றும் ஊடக வலிமைப்படுத்தல் ஒன்றிணைவு மற்றும் புதிய வழிகளில் முன்னேறல் (CSM-STAND) பொறிமுறை IREX இனால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
GLX பற்றி
தெற்காசிய பிராந்தியத்தில் புதிய வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவதற்கான புத்தாக்கம் மற்றும் அபிவிருத்தி வழிமுறைகளை கொண்ட அமைப்பாக Good Life X (GLX) திகழ்கின்றது. தமது தீர்வுகளினூடாக, மீளுருவாக்கம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஆரம்பநிலை நிறுவனங்கள், சிறிய நடுத்தரளவு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு துரித முன்னேற்றத்துக்கு அவசியமான அறிவையும் நிபுணத்துவத்தையும் இந்நிறுவனம் வழங்குகின்றது.








































Discussion about this post