இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் 2024 மற்றும் பிராந்திய ஜூனியர் 2025 தொடர்களை தொடர்ச்சியாக 16ஆவது ஆண்டாக வலுவூட்டும் பிறீமா சன்ரைஸ்
கொழும்பு, இலங்கை, 2024 டிசம்பர் 04 : இலங்கையின் முன்னணி போசணை நிறுவனமான பிறீமா, தொடர்ச்சியாக 16ஆவது வருடமாக மிகவும் மதிப்புமிக்க கோல்ஃப் சம்பியன்ஷிப்பான ஸ்ரீ லங்கா ஜூனியர் ஓபன் தொடருக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் ஜூனியர் கோல்ஃப் தொடரின் மேம்பாட்டிற்கான தனது ஆதரவைத் தொடர்கிறது. இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்து நட்சத்திரங்கள் பங்கேற்கும் 2024 இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் தொடரிலும் மேலும் பெரிதாக வெளிப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பியன்ஷிப் தொடர் ஆனது.. டிசம்பர் 10 முதல் 12 வரை ரோயல் கொழும்பு கோல்ஃப் கிளப்பில் (RCGC) நடைபெறவுள்ளது. பயிற்சி சுற்றுகளை டிசம்பர் 09ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் மு.ப. 8.00 மணிக்கு Tee-off இனை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
Prima Group Sri Lanka குழும பொது முகாமையாளர் Andy Wirawan இது பற்றித் தெரிவிக்கையில், “இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் ஆனது, இலங்கையின் தேசிய தரவரிசைக்கான அளவுகோலாகும். Prima Group Sri Lanka நிறுவனம் Sri Lanka Golf உடன் பங்காளியாக இருப்பது பெரும் பாக்கியமாகும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, ஆர்வமுள்ள இளம் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கி அவர்களை மேம்படுத்தும் பயணத்தின் ஒரு அங்கமாக இருந்து, வருடாந்தம் ஒரு தனித்துவமான வாய்ப்பை எமது அனுசரணை வழங்குகிறது என நாம் உறுதியாக நம்புகிறோம். இளம் வீரர்கள் தமது திறனை வளர்த்துக் கொள்ளவும், விளையாட்டில் சிறந்து விளங்கவும் இது உதவும்.” என்றார்.
ஜூனியர் கோல்ஃப் விளையாட்டில் உலக அமெச்சூர் கோல்ஃப் தரவரிசையாக (WAGR) அங்கீகரிக்கப்பட்ட இலங்கை ஜூனியர் ஓபன் ஆனது, ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தேசிய ஜூனியர் சம்பியனாக மகுடம் சூடியுள்ளதோடு, பாலின அங்கீகாரத்தையும் கொண்டு வருகிறது.
Prima Group Sri Lanka நிறுவனத்தின் Ceylon Agro Industries பொது முகாமையாளர் சஜித் குணரத்ன தெரிவிக்கையில், “ஜூனியர் கோல்ஃப் மேம்பாட்டிற்கான நீண்ட கால பங்காளி எனும் வகையில், இந்த வருடமும் மீண்டும் ஒருமுறை ஜூனியர் ஓபன் கோல்ஃப் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் போட்டி அடுத்த தலைமுறை கோல்ப் வீரர்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் அதன் வெற்றிக்கு பங்களிப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.
பிறீமாவின் உறுதியான ஆதரவானது இலங்கையின் ஜூனியர் கோல்ஃப் துறையை பாரிய அளவில் முன்னேற்ற உதவியுள்ளது. சிரேஷ்ட குழுவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களான ஜீவன் சதாசிவம், ரெஷான் அல்கம, கயா தலுவத்த, ஆதித்யா வீரசிங்க, சித்தாரா லோரன்ஸ், அனுமி கருணாதிலக, ஜேக்கப் நோர்ட்டன் ஆகியோரும் ஜூனியர் குழுவில் லவிந்து பிரேமரத்ன, ரெவான் அமரசிங்க, தேஜஸ் ரதிஸ் காந்த், செனல் நிம்சித் ஆகியோர் பிரகாசிக்கின்றனர்.
இலங்கை கோல்ஃப் தலைவர் ரணில் பீரிஸ் இங்கு தெரிவிக்கையில், “பிறீமாவின் நீடித்த பங்காளித்துவத்தை SLG வரவேற்பதோடு, அதற்காக நன்றியுடனும் உள்ளது. இந்த நிகழ்வை எமது தேசிய கோல்ஃப் நாட்காட்டியின் மிகவும் விரும்பப்படும் போட்டியாக மாற்றுவதில் Prima முக்கிய பங்கு வகிப்பதோடு, இது இலங்கையின் திறமையாளர்களை வெளிக் கொண்டு வருகிறது. இளம் கோல்ஃப் திறமையாளர்கள் மற்றும் விளையாட்டில் பிறீமாவின் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும்.” என்றார்.
பிரதான அனுசரணையாளர் எனும் வகையில் பிறீமா சன்ரைஸ் பாண் வர்த்தகநாமமானது, சம்பியன்ஷிப் முழுவதும் அனைத்து வீரர்களுக்கும் போசாக்கை வழங்குவதற்கான ஆதரவை வழங்குகின்றது. டிசம்பர் 12ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பரிசளிப்பு விழாவுடன் இப்போட்டிகள் நிறைவடையும்.
பிறீமாவின் அனுசரணையின் முக்கிய பங்கை வலியுறுத்திக் கூறிய ஜூனியர் மேம்பாட்டுக் குழுவின் தலைவி நிலூ ஜயதிலக, “பிறீமா சன்ரைஸின் நீண்ட கால அர்ப்பணிப்பானது, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கின்றது. இது தேசிய அளவில் சிறந்து விளங்குவதற்கும் தேசிய பிரதிநிதித்துவத்திற்கான இளம் கோல்ப் வீரர்களாக தம்மை மாற்றிக் கொள்வதற்குமான ஒரு போட்டித் தளத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ஜூனியர் ஓபன் மற்றும் பிராந்திய ஜூனியர் ஓபன் போட்டிகளுக்கான பிறீமாவின் அனுசரணையானது இந்த விடயத்தில் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது.” என்றார்.
2024 இலங்கை ஜூனியர் ஓபன் கோல்ஃப் சம்பியன்ஷிப் தொடரானது, வளர்ந்து வரும் திறமையாளர்கள், சர்வதேச தோழமைக்கான வாய்ப்புகள் மற்றும் விளையாட்டில் பிறீமாவின் நீடித்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கிய கொண்டாட்டமாக அமையவுள்ளது.
வயதுப் பிரிவுகள்:
திறந்த | தங்கப் பிரிவு – 15 முதல் 18 வயது வரையான சிறுவர், சிறுமியர்
வெள்ளிப் பிரிவு – 13 முதல் 14 வயது வரையான சிறுவர், சிறுமியர்
வெண்கலப் பிரிவு – 11 முதல் 12 வயது வரையான சிறுவர், சிறுமியர்
செம்புப் பிரிவு – 10 வயது மற்றும் அதற்கு கீழ்ப்பட்ட சிறுவர், சிறுமியர்





































Discussion about this post