செலான் வங்கி தொடர்ந்து 2வது வருடமாக சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சி 2024 உடன் இணைகிறது
பலராலும் எதிர்பார்க்கப்படும் சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சி 2024 உடன் செலான் வங்கி தொடர்ந்து 2வது வருடமாக இணைகிறது. கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் ஏற்பாடு செய்யப்படும் இக்கண்காட்சியானது ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூன் 24ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.
சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சி 2024இற்கான செலான் வங்கியின் ஆதரவு, இலங்கையின் கைத்தொழில்கள் மற்றும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் (SMEs) வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஊக்கமளித்து சாதகமான பொருளாதார சூழலில் உள்ளூர் வர்த்தகங்களை வலுவூட்டும் வங்கியின் நோக்கத்துடன் நன்கு எதிரொலிக்கிறது. இந்த கண்காட்சியை ஆதரிப்பதன் மூலம் அன்புடன் அரவணைக்கும் வங்கியானது பொருளாதார செழுமையை வளர்ப்பதையும், நாட்டை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சி 2024, தொழில்துறை நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் அனைத்து தொழில் வல்லுனர்களுக்கும் இலங்கையின் தொழில்துறை வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய கருத்துக்கள் மற்றும் தீர்வுகளை பகிரக்கூடிய ஒரு தளமாக செயற்படுகிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை சபைகள், சங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை மற்றும் வணிக வர்த்தகர்களின் பங்கேற்புடன், இக்கண்காட்சி நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு வழிவகுக்கும் காரணியாக அமையும்.
தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் SMEகளின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல நிதிச் சேவைகளை வழங்கும் நம்பகமான நிதி இடைத்தரகராக செலான் வங்கி செயற்படுகிறது. சிறப்பு வங்கியியல் தீர்வுகளை வழங்குவதன் மூலம் செலான் வங்கி இலங்கையின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தி நாட்டின் பொருளாதார செழுமைக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சர்வதேச கைத்தொழில்துறை கண்காட்சி 2024, இலங்கையின் தொழில்துறை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் முதலீடு செய்யும் அனைத்து பங்குதாரர்களும் அவசியம் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வாகும். கண்காட்சியின் போது செலான் வங்கியின் நிதிச் சேவைகள் பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ளவும் அவர்களுடன் இணையும் வாய்ப்புக்கள் பற்றி கலந்துரையாடவும் பங்கேற்பாளர்களை அவர்களின் காட்சிக்கூடத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறது.
செலான் வங்கி தொடர்பாக
அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சிறந்த தரமான சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அதி சிறந்த வங்கி அனுபவத்தை வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் செயற்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சில்லறை விற்பனை மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்கள் உள்ளடங்கலாக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இவ்வங்கி, நாடு முழுவதும் 540ற்கும் மேற்பட்ட அணுகல் புள்ளிகளைக் கொண்டுள்ளது. செலான் வங்கியானது நிதிரீதியாக நிலையான மற்றும் சிறந்த செயற்திறன் மிக்க நிறுவனமாக Fitch Ratings நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A-’(lka)வாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இவை செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் நிலையான சேவை வழங்கலை உறுதி செய்வதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.




































Discussion about this post