SLICGL, அதன் மோட்டார் ப்ளஸ் பூரண காப்புறுதி உரிமையாளர்களுக்கு பிரத்தியேகமான சலுகைகளை வழங்க ஹமீடியாவுடன் இணைகிறது
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோர்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனம் ஆடவர் ஆடைகள் உற்பத்தித் துறையில் தரம் மற்றும் நவநாகரிகத்தில் முன்னணியில் திகழும் வர்த்தக நாமமான ஹமீடியா நிறுவனத்துடன் மூலோபாய பங்காளித்துவத்தை அறிவித்துள்ளது. இலங்கையின் காப்புறுதி சந்தையில் முதன்முதலாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த தனித்துவ முயற்சி, SLICGLஇன் மோட்டார் ப்ளஸ் பூரண காப்புறுதி உரிமையாளர்களுக்கு பிரத்தியேகமான தள்ளுபடிகள் மற்றும் நன்மைகளை வழங்குகிறது. இந்த இணைவு ஜூன் 28, 2024 அன்று Envoy Mansionஇல் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) பரிமாற்றத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இரு தரப்பினதும் முக்கிய பிரதிநிதிகளின் முன்னிலையில் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஹமீடியாவின் பிரதிநிதிகளாக அதன் பணிப்பாளர்களான மிகைல் ஹமீட், அம்ஜத் ஹமீட் மற்றும் ஹசன் உஸ்ரி ஆகியோருடன் அதன் CIO/ஆலோசகரான கலும் ஜயசேகர, மனிதவள மற்றும் செயற்பாடுகளின் தலைவர் A.T.M. ஃபர்ஸான் மற்றும் பிரதேச முகாமையாளர் தனுஷ்க வெலகெதர ஆகியோர் பங்கேற்றனர். SLICGLஐப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதம செயற்பாட்டு அதிகாரியான பிரியந்த பெரேரா, பெருநிறுவன வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் உதவிப் பொது முகாமையாளர் மகேஷ் கமகே மற்றும் பெருநிறுவன வர்த்தகப் பிரிவின் பொதுத் துறையின் சிரேஷ்ட முகாமையாளர் ரவி மெடிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், மோட்டார் ப்ளஸ்ஸின் பூரண காப்புறுதி உரிமையாளர்கள் hameedia.com, signature.lk மற்றும் அனைத்து ஹமீடியா மற்றும் சிக்னேச்சர் (Signature) கடைகளில் கொள்வனவை மேற்கொள்ளும்போது 15% விலைக்கழிவையும், கொழும்பு 03இல் அமைந்துள்ள Envoy Mansionஇன் My Friend Caféஇல் 15% விலைக்கழிவையும் பெறுவார்கள்.
பாரம்பரிய காப்பீட்டு சலுகைகளுக்கு அப்பால் வாடிக்கையாளர் மதிப்பை மேம்படுத்துவதற்கான SLICGLஇன் அர்ப்பணிப்பை இந்த மூலோபாய இணைவு பிரதிபலிக்கிறது. ஹமீடியாவுடன் இணைவதன் மூலம் SLICGL வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை செழுமைப்படுத்தும் வெகுமதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காப்பீட்டைத் தாண்டிய மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்குவதில் SLICGLஇன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துவதில் நிறுவனத்தின் புதுமையான அணுகுமுறையை இந்த முயற்சி பிரதிபலிக்கின்றது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, அன்றாட நன்மைகளுடன் காப்பீட்டு பாதுகாப்பை ஒருங்கிணைப்பதன் மூலம் முழுமையான வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்கி காப்பீட்டுத் துறையில் ஒரு புதிய தரநிலையை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. SLICGL அதன் அனைத்து மோட்டார் ப்ளஸ் பூரண காப்புறுதி உரிமையாளர்களையும் இந்த பிரத்தியேக சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளவும் SLICGL குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் நன்மையை அனுபவிக்கவும் ஊக்குவிக்கிறது.





































Discussion about this post