சிறந்த கல்விப் பங்காளர் என்ற ரீதியில் உயர் கல்வியில் நிகரற்ற சலுகைகளை வழங்கி முன்னிலையில் திகழும் SLIIT
சிறந்த உயர்கல்வி நிறுவனத்தைத் தெரிவுசெய்வது என்பது மாணவரின் எதிர்கால அபிலாஷைகளைத் தீர்மானிப்பதில் முக்கியமான முடிவாகும். சிறந்த உயர் கல்விப் பங்காளர் என்ற தெரிவை வழங்குவதன் ஊடாக இலங்கையின் கல்வியியல் ரீதியில் புதிய கண்டுபிடிப்புக்களை வழங்குவதிலும், சிறந்ததொரு கலங்கரை விளக்கமாகவும் SLIIT முன்னணியில் திகழ்கின்றது.
இலங்கையின் கல்வித் துறையில் சிறந்து விளங்குபவர் என்ற பாரம்பரியத்தை ஏற்படுத்தியுள்ள SLIIT 25 வருடத்துக்கும் அதிகமான கால அனுபவத்தைக் கொண்டுள்ளது. SLIIT நிறுவனம் 1999ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல் கால் நூற்றாண்டு காலமாக நிபுணத்துவம் மற்றும் திறமைகளை வளர்ப்பதில் நிரூபிக்கப்பட்ட சாதனைகளைக் கொண்டுள்ளது. கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு தனியார் கல்வித் துறையில் சிறப்புக்கான அடையாளமாக விளங்குகின்றது. இது பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான சர்வதேச சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் திகழ்கின்றது. ஐக்கிய இராச்சியத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற முதலாவது இலங்கை நிறுவனமாகவும் SLIIT காணப்படுகின்றது. இதனால் வழங்கப்படும் சிவில் மற்றும் இயந்திரப் பொறியியல் பட்டப்பாடத் திட்டங்கள் இலங்கை பொறியியல் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாலபே கம்பஸ், கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கம்பஸ் வளாகங்கள் மற்றும் மாத்தறை, குருநாகல் ஆகிய இடங்களில் இதன் நிலையங்கள் என நாடு முழுவதில
ும் பரந்துவிரிந்து தனது சேவைகளை வழங்கி வருகின்றது. இதன் விரிவாக்கப்பட்ட இந்த வலையமைப்பானது தரமான கல்விக்கான அணுகல் நாடு முழுவதிலும் கிடைப்பதை உறுதி செய்கின்றது.
SLIIT நிறுவனம் இன்று 25,000ற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 40,000ற்கும் அதிகமான பழைய மாணவர் வலையமைப்பைக் கொண்டுள்ளது. நிபுணர்களாகவுள்ள பழைய மாணவர்களின் வலையமைப்புக்கள் உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் பல்வேறு துறைகளில் தனது பங்களிப்புக்களை வழங்கி வருகின்றன. SLIIT இனால் உருவாக்கப்பட்டுள்ள பாரிய மற்றும் பரந்துபட்ட இந்தச் சமூகமானது வாய்புக்களை ஒன்றிணைப்பதற்கும், மாணவர்களின் கல்வி மற்றும் துறைசார் பயணத்துக்கு வலுவான ஆதாரமாகவும் அமைந்துள்ளது.
QS ஆசிய பல்கலைக்கழகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் SLIIT இலங்கையில் 07வது இடத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், டைம்ஸ் உயர்கல்வி தாக்கம் குறித்த 2023ம் ஆண்டின் தரப்படுத்தலில் இலங்கையில் 06வது இடத்தையும் இது பிடித்துக்கொண்டது. இதற்கு மேலதிகமாக 2024ஆம் ஆண்டுக்கான Scimago உலகத் தரப்படுத்தலில் ஒட்டுமொத்த இலங்கையில் 5வது இடத்தை நாம் பெற்றுள்ளோம். இந்த அனைத்துத் தரப்படுத்தல்களின் அடிப்படையில் இலங்கையில் உள்ள அரசு சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் நாம் முதலாவது இடத்தில் காணப்படுகின்றோம். ஆய்வுக்கான மானியத் திட்டம், பாடநெறியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வு முறைமைகள், ஆய்வுக்கான மையங்களை உருவாக்கியமை போன்ற சிறப்பான ஆய்வுக் கலாசாரத்தின் மூலம் இந்நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளின் ஊடாக எமது மாணவர்கள் தமது வாழ்க்கைப் பயணத்தில் வெற்றியடைவதற்குத் தேவையான சிறந்த கற்றல் அனுபவத்தை நாம் வழங்குகின்றோம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பட்டங்கள், பட்டப்பின்படிப்புப் பாடத்திட்டங்கள் என 75ற்கும் அதிகமான பட்டக் கல்வித் திட்டங்களின் ஊடாக பல்வேறு எதிர்பார்ப்புக்கள் மற்றும் தொழில் ரீதியான அபிலாஷைகளுக்குப் பொருந்தக் கூடிய கல்விக்கான வழிகளை SLIIT வழங்குகின்றது. கணினி மற்றும் பொறியியலில் இருந்து வணிகம், கல்வி, விஞ்ஞானம், குவான்டிட்டி சேவயரிங், வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை, தாதியியல், உயிரியல் தொழில்நுட்பம், ஃபஷன், சட்டம், நிதியியல் கணிதம், உளவியல், விருந்தோம்பல் மற்றும் சமையல் மற்றும் நிகழ்வு முகாமைத்துவம் எனப் பரந்துபட்ட துறைகளில் பட்டப்பாடத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக முதுமானி மற்றும் PhD போன்ற பட்டப்பின்படிப்புப் பட்டங்கள் ஊடாக மாணவர்கள் தமது ஆர்வத்தைப் பூர்த்தி செய்வதற்குப் பரந்துபட்ட வாய்ப்புக்களை வழங்குகின்றது.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள 400ற்கும் அதிகமான கல்வியியலாளர்களைக் கொண்ட அதாவது உள்ளக மற்றும் வருகைதரு விரிவுரையாளர்கள் குழுவைக் கொண்டுள்ளது. இவர்களில் பலர் கலாநிதிப் பட்டங்களைக் கொண்டிருப்பதுடன், பெயர்பெற்ற முன்னணி பல்கலைக்கழகங்களில் சர்வதேச ரீதியான ஆய்வுப் பின்னணிகளுடனான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளனர். 50 வருடங்களுக்கு மேலான நிபுணத்துவ அனுபவத்துடன் கணினி விஞ்ஞானம், பொறியியல், சட்டம், கட்டடவடிவமைப்பு மற்றும் சமூக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் எமது மாணவர்களுக்கு அவர்கள் சிறந்த வழிகாட்டல்களை வழங்குகின்றனர். சிறந்த ஆய்வு வசதிகளைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் சிறப்புக்களில் உயர்ந்த இடத்துக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதை SLIIT ஊக்குவிக்கின்றது. எமது பட்டதாரிகள் உலகளாவிய தளத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவது மாத்திரமன்றி, நிஜஉலக சவால்களை வினைத்திறனான முறையில் கையாளக்கூடியவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் தொடர்ந்தும் உயர்ந்த தரத்தைப் பேணி வருகின்றோம்.
SLIIT நிறுவனமானது 50ற்கும் அதிகான பல்கலைக்கழங்கள் மற்றும் தொழில்துறை பங்குதார்களுடன் உறுதியான தொழில்துறை தொடர்புகளைப் பேணி வருகின்றது. மாணவர்களின் கல்வியானது நிஜஉலகத் தேவைகள் மற்றும் வாய்ப்புக்களுக்கு இணங்கும் வகையில் அமைந்துள்ளன. இந்தத் தொடர்புகளின் உதவியுடன்; நுண்ணறிவுகள், நடைமுறை அனுபவம், வேலைவாய்ப்புக்கள் மற்றும் வாய்ப்புக்களுக்கான இணைப்புக்கள் என்பவற்றை மாணவர்கள் பெறுகின்றனர்.
தொழில்துறையுடன் தொடர்புபட்ட கற்றல்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களின் நுண்ணறிவுகளைப் பெற்று அவற்றன் அடிப்படையிலேயே SLIIT இன் பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறை ஒப்படைகள், உள்ளிருப்புப் பயிற்சி மற்றும் ஒரு விடயத்தின் அடிப்படையிலான கற்றல் என்பன மாணவர்கள் நிபுணத்துவ உலகின் சவால்களுக்குத் தம்மைத் தயார்ப்படுத்த உதவுகின்றன. இதற்கும் அப்பால், உள்ளிருப்புப் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்களின் ஊடாக மாணவர்கள் பெறுமதியான வாய்ப்புக்களைப் பெறுகின்றனர். இதன் ஊடாக அவர்கள் பெற்றுக்கொள்ளும் திறன் வகுப்பறையில் பெற்ற அனுபவத்தை நிஜ உலகத்தில் பயன்படுத்தவும், தமது தொழில் வாழ்க்கையில் சிறந்த அடித்தளத்தை இடுவதற்கும் வாய்ப்பாக அமைகின்றன.
தொழில்துறைக்கு இணங்கும் வகையில் SLIIT கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக் காரணமாக தொழிலாளர் சக்திக்கு ஏற்ற வகையில் பட்டதாரிகள் தயாராவது உறுதிப்படுத்தப்படுகின்றது. பாடத்திட்டம் நடைமுறைத் திறன், விமர்சன சிந்தனை, பிரச்சினைகளைத தீர்த்தல் போன்றவற்றின் ஊடாக நிஜஉலக சவால்களை வெற்றிகொள்வதை இந்தப் பாடத்திட்டம் வலியுறுத்துகின்றது. வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் நிகரற்றதாகக் காணப்படுகின்றது. குறிப்பாக SLIIT பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 98% ஆகக் காணப்படுவதுடன், தொழில்துறைக்குத் தேவையான பட்டதாரிகளை உருவாக்குவதில் SLIIT கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு இதன் ஊடாகப் பறைசாற்றப்படுகின்றது.
ஆய்வு என்பது SLIIT உடன் இணைந்ததொரு பகுதியாகும். பட்டதாரிகள் மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டதாரிகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வுமுறைகளுக்கான பல்வேறு முற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆய்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கான ஆய்வு நிலையம் உருவாக்கப்பட்டிருப்பதுடன், சிறந்த ஆய்வுக் கலாசாரத்தை ஊக்குவிக்குவிக்க செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதுடன், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான மானியங்களும் வழங்கப்படுகின்றன.
கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில் மாணவர்களுக்குத் தேவையான அதிநவீன வசதிகளையும், புத்தாக்கம் நிறைந்த கற்றலுக்கான சிறந்த சூழலையும் SLIIT ஏற்படுத்திக் கொடுக்கின்றது. மேம்பட்ட ஆய்வகம், நூலகங்கள் மற்றும் பிற நவீன வசதிகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான சிறந்த சூழலை உறுதி செய்கின்றன.
தொழில்துறையுடன் கொண்டிருக்கும் வலுவான இணைப்புக்கள், விரிவான திட்ட்ஙகள் மற்றும் வேலைவாய்ப்பைப் பெறக்கூடிய பட்டதாரிகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்பைக் கொண்டிருப்பதால், வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்க SLIIT சிறந்த அடித்தளமாக அமைகின்றது. கல்விக்கான பாதையைத் தேடும் மாணவர்கள் தமது எதிர்கால அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள நிறுவனத்தின் ஒரு பகுதியாக இணைவதற்கான வாய்ப்பைப் பெறு;கள் கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
2024 ஜுலை உள்ளீர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் கியூ ஆர் குறியீட்டைப் பயன்படுத்தவும் அல்லது 011 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.











































Discussion about this post