ஈழத்தின் முதலாவது “லிங்காஷ்டகம்” – இசை ஆல்பம் வெளியீடு
கடந்த(நேற்று) 10.03.2024 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் “சிவபூமி- ஈழத்து லிங்காஷ்டகம்” எனும் இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளிலும் சிவனை மையப்படுத்தி “லிங்காஷ்டம்” எனும் பாடல் எழுதப்பட்டு மறைந்த இசை மேதை எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களால் பாடப்பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம்.
ஆனால் இலங்கையில் சிவனை மையப்படுத்திய ஒரு லிங்காஷ்டக பாடலை இதுவரை யாரும் எழுதவுமில்லை ,பாடவுமில்லை.
எனவே இலங்கைக்கென ஒரு லிங்காஷ்டகப் பாடலை எழுத வேண்டும் என வரலாற்று ஆய்வாளர் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் முனைப்போடு செயற்பட்டு நேற்று லிங்காஷ்டகம் உற்பட பஞ்ச ஈஸ்வரங்களின் முழுமையான வரலாற்றைக் கூறும் 5 பாடல்கள் உள்ளடங்கலாக மொத்தமாக.
10 பக்திப்பாடல்கள் அடங்கிய இசை ஆல்பம் பல அதிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இதன் முதல்பிரதியை விழா நாயகன் திரு.திருச்செல்வம் வழங்க இந்து சுயம்சேவ சங்கத்தின் மூத்த அமைப்பாளர் திரு.இராமசாமி விஜயபாலன் பெற்றுக்கொண்டார்.
மேலும் இப்பாடல்கள் பற்றி திரு. திருச்செல்வம் உரையாற்றுகையில்
இப்பாடலை இந்திய லிங்காஷ்டகப் பாடல்களைப் போல் சிவனின் பெருமையைக் கூறும் பாடலாக அல்லாது சற்று வேறு விதமாக, இலங்கையில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயில்களை மையமாக வைத்து, எழுதி, வேறு மெட்டிலே உருவாக்கி உள்ளதாகவும் .
இப்பாடலை இசை மேதை எஸ்.பி.பி. அவர்களின் மகன், அவரின் குரல் வாரிசு திரு. எஸ்.பி.பி. சரண் படியுள்ளதாகவும்குறிப்பிட்டார்.குறிப்பிட்டார்.
மேலும் அவர் கடந்த 25 வருட ஆய்வின் மூலம் இலங்கை முழுவதும் கண்டறிந்த, அழிந்து மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் 82 லிங்கங்கள் உட்பட 150 வருடங்களுக்கு முற்பட்ட, 170 சிவன் கோயில்களை உள்ளடக்கி 180 வரிகளில் இப்பாடலை எழுதியுள்ளார் என்பது எமக்கு வியப்பையும் வரலாறு தொடர்பான தேடலையும் கொடுக்கின்றது.









































Discussion about this post