உள்ளீர்ப்புக்கான ‘2024 அனுமதிப்பு தினத்தை’ முடிவுக்குக் கொண்டுவந்தது SLIIT
மாலபே SLIIT கம்பஸ் வளாகத்தில் ஜூன் 15 ஏற்பாடு செய்யப்பட்டிருநு்த ‘அனுமதிப்பு நாள் 2024’ நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பங்கெடுத்த மாணவர்கள் எமது மதிப்புக்குரிய விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
இதன் ஊடாக விண்ணப்பிப்பதற்கு ஆர்வம் உள்ள மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் மற்றும் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட இன் பட்டப்பின்படிப்பு பட்டப்பாடத்திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டனர். இந்தப் பட்டப்பாடத் திட்டங்கள் காலத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன், தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழில்துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்விசார் நிபுணர்கள், உள்ளாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் ஆலோசனைகளைப் பெற்று வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனை வெற்றிகரமான நிகழ்வாகப் பூர்த்திசெய்வதற்கு இதில் பங்கெடுத்த அனைவருக்கும் இதயபூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்கள் மாணவர்கள் கற்பதிலும், தம்மை வளர்ப்பதிலும் கொண்டிருக்கும் ஆர்வம் குறித்து நாம் பெருமை கொள்வதுடன், எங்கள் விரிவுரையாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்தையும் பாராட்டுகின்றோம்.








































Discussion about this post