சியபத பினான்ஸ் பிஎல்சி கடனீட்டுப் பத்திர வெளியீடு மிகையான பதிவுகளைப் பெற்றுள்ளது
சம்பத் வங்கியின் துணை நிறுவனமும், இலங்கையின் வங்கியல்லாத நிதித்துறையில் முன்னணியிலும்; உள்ள சியபத பினான்ஸ் பிஎல்சி, முதலீட்டாளர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்று, அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்திசெய்து, அதன் சமீபத்திய கடனீட்டு பத்திர வெளியீட்டின் மகத்தான வெற்றியை அறிவிக்கிறது.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப பொது வழங்கல், கடனீட்டுப் பத்திர வெளியீடு 28ஆம் திகதி மே மாதம் 2024 அன்று பதிவுகளுக்காக அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டு, சந்தையில் இருந்த குறிப்பிடத்தக்க நேர்மறையான முதலீட்டாளர்களின் அதிகளவிலான வரவேற்பின் காரணமாக அன்றைய தினமே சியபத பினான்ஸ் பிஎல்சி நிர்வாகத்தால் மூடத்தீர்மானிக்கப்பட்டது.
ஆரம்ப தவணையாக ரூ. 2 பில்லியன் மற்றும் அடுத்தடுத்த தவணைகளாக ரூ. 1 பில்லியன், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மிகையாக பதிவு செய்யப்பட்டதன் மூலம், சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் மீதான நேர்மறையான முதலீட்டாளர் வரவேற்பு மற்றும் நம்பிக்கை பிரதிபலிக்கப்படுகிறது. நிறுவனம் அளவுக்கு அதிகமாக விண்ணப்பங்களை பெற்று அதன் தொகை ரூ. 4 பில்லியனுக்கும் மேலாக உயர்ந்துள்ளமையானது சியபத பினான்ஸ் பிஎல்சியின் சலுகைகளுக்கான வலுவான தேவையைக் குறிக்கிறது.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் (நிறைவேற்றுப் பணிப்பாளர்) திரு. ஆனந்த செனவிரத்ன இந்த மிகையான பதிவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ‘இந்த அதீதமான கோரிக்கையானது, எமது பங்குதாரர்களுக்கு பெறுமதியை வழங்குவதற்கும் நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் எங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சியபத பினான்ஸ் பிஎல்சி மீது முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வலியுறுத்தும் வகையில், எங்களது கடனீட்டுப் பத்திர வெளியீட்டிற்கு கிடைத்த உற்சாகமான பதிலால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று கூறினார்.
பட்டியலிடப்பட்ட, மதிப்பிடப்பட்ட, சிரேஷ்ட, பாதுகாப்பற்ற, மீட்டெடுக்கக்கூடிய கடன் பத்திரங்களை, ஐந்தாண்டு கால அவகாசத்துடன், ஒரு அலகுக்கு ரூபா 100 என்ற வகையில் வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானம், சியபத பினான்ஸ் பிஎல்சியின் வரவுசெலவுத் திட்ட கடன் பிரிவிற்கு நிதியளிப்பதை நோக்கி செலுத்தப்படும். இந்த கடனீட்டுப் பத்திரங்கள், ஆண்டுக்கு 13.20% (AER 13.20%) என்ற நிலையான வட்டி விகிதத்தைக் கொண்டவை, இப்போது கொழும்பு பங்குச் சந்தையில் அதிகாரபூர்வமாக பட்டியலிடப்படவுள்ளன. முதலீட்டாளர்களிடையே கடனீட்டுப் பத்திரங்களின் விநியோகத்தில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்து, விடயத் தொகுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரக்குறிப்புகளுக்கு இணங்க ஒதுக்கீடுக்கான அடிப்படை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் கெப்பிடல் லிமிடட், கடனீட்டுப் பத்திரங்களின் தலைமை நிர்வாகியாக இருக்கும் அதே நேரம், மதிப்புமிக்க பங்காளர்களாக ஹட்டன் நெஷனல் வங்கி பிஎல்சி அறங்காவலராகவும், சம்பத் வங்கி பிஎல்சி வங்கியாளராகவும், எஸ்எஸ்பி கோர்ப்பரேட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் பதிவாளராகவும், நித்யா பார்ட்னரஸ்; சட்ட ஆலோசகராகவும், எர்ன்ஸ்ட் அண்ட் யங் அறிக்கையிடல் கணக்காளர்களாகவும் மற்றும் KPMG நிறுவனத் தணிக்கையாளர்களாகவும் விளங்குகிறது. Fitch Ratings Lanka limited கடன் தரப்படுத்தல் சேவைகளை வழங்குகிறது., இலங்கையின் நிதித்துறையில் நம்பகமான பெயராக சியபத பினான்ஸ் பிஎல்சி வலுவான நிதி நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது.





































Discussion about this post