ஜுனியன் வங்கியின் வாடிக்கையாளர்களை ஜா-எல VIMAN மாதிரி தொடர்மாடிக் குடியிருப்புக்கு அழைத்திருந்த John Keells Properties நிறுவனம்
ஜா-எல Viman திட்டத்திற்கு நெகிழ்வான அடகுத் தீர்வுகளை வழங்குவதற்காக John Keells Properties நிறுவனம் யூனியன் வங்கியுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. வங்கியின் வாடிக்கையாளர்களுக்குத் தனித்துவமான நிகழ்வொன்றை மார்ச் 06ஆம் திகதி ஏற்பாடு செய்து, அதாவது வொக்ஸ்ஹால் வீதி, கொழும்பு 02 என்ற முகவரியில் அமைந்துள்ள John Keells Properties நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜா-எல Viman குடியிருப்புத் திட்டத்தின் மாதிரி தொடர்மாடியைப் பார்ப்பதற்கான வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து வங்கியுடனான உறவை நிறுவனம் மேலும் பலப்படுத்தியது. இந்த நிகழ்வின் ஊடாக வாடிக்கையாளர்கள் மாதிரி தொடர்மாடியை முழுமையாகச் சுற்றிப்பார்த்ததுடன், ஜா-எல Viman குடியிருப்புத் திட்டத்தில் தமது வீட்டுக் கனவை எவ்வாறு நனவாக்குவது என்பது தொடர்பில் John Keells Properties நிறுவனத்தின் அனுபவமிக்க விற்பனைக் குழுவினருடன் கலந்துரையாடினர். நிறுவனத்துடன் இணைந்து யூனியன் வங்கியினால் வழங்கப்படும் புதுமையான அடகுப் பொதியானது வருங்கால வீட்டு உரிமையாளர்கள் தனிப்பயனாக்கப்பட்ட நிதியளிப்பு விருப்பங்களை அணுகுவதற்கும், இதன் ஊடாக ஜா-எல Viman குடியிருப்புத் திட்டத்தை அணுகுவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது. ஜா-எல நகரத்தின் இதயப் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தீரணத்தில், சௌகரியமான நவீன 418 தொடர்மாடி வீடுகளைக் கொண்டிருக்கும் Viman பாதுகாப்பான, நட்பான குடும்பச் சூழல், சிறிய நகரக் கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு கொழும்பு நகருக்கான அணுகல் என கலவையான வசதிகளை வழங்குகிறது.
வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொண்ட John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலுக்கான தலைவரும், John Keells Group இன் பிரதித் தலைவருமான நதீம் ஷம்ஸ் மற்றும் அந்நிறுவனத்தின் விற்பனைக் குழுவினர் ஜா-எல Viman திட்டத்தில் முதலீடு செய்வதில் காணப்படும் பல்வேறு நன்மைகள் மற்றும் அதில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் போன்ற விடயங்களுக்கான விளக்கங்களை வழங்கினர். “எமது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சியரமான அடகுப் பொதிகளை வழங்குவதற்காக யூனியன் வங்கியுடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பசுமையான மத்திய தோட்டத்தினால் சூழப்பட்டுள்ள Viman, நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக் கூடம், தியான கூடம், கிளப்ஹவுஸ், சிறுவர்கள் விளையாட்டு இடம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம், பல்வேறு வெளிக்கள விளையாட்டுக் கூடங்கள் என்பவற்றுடன் இவற்றுக்கு மேலதிகமாக இலத்திரனியல் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான நிலையம் என்பவற்றையும் கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் குடியிருப்பாளர்கள் தங்களுடன் மீண்டும் இணைவதற்கு அமைதியான சூழலை ஏற்படுத்துவதுடன், குடும்பங்கள் செழிப்பதற்கான இடத்தையும் வழங்குகின்றன. முக்கியமாக வினைத்திறனான வலுசக்தியை வழங்கும் சூரியப்படலங்களைக் கொண்ட வீடுகள், பசுமையான இடங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் வலுவான இணைப்பு போன்றவற்றின் மூலம் நவீன வசதியான மற்றும் நிலைபேறான வாழ்க்கைமுறைக்கு John Keells Properties நிறுவனம் முன்னுரிமை அளித்துள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்” என்றார்.
யூனியன் வங்கியின் ரீடெய்ல் வங்கிப் பிரிவின் சிரேஷ்ட உதவித் தலைவர் சாயா ஜயவர்த்தன குறிப்பிடுகையில், “ஜா-எல Viman திட்டத்தில் John Keells Properties நிறுவனத்துடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வீட்டின் உரிமையைப் பெற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கும் உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் யூனியன் வங்கி அர்ப்பணிப்புடன் செயற்படுவதுடன், இதன் ஊடாக எமது வாடிக்கையாளர்களின் தேவைக்குப் பெருந்;தும் வகையில் நெகிழ்வான அடகுத் தீர்வுகளை எம்மால் வழங்க முடிகின்றது. இந்த நிகழ்வுக்கு எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை அழைத்ததன் ஊடாக Viman மாதிரி தொடர்மாடித் திட்டத்தைப் பார்வையிடுவதற்கு சிறந்த வாய்ப்பும் கிடைத்தது” என்றார்.
Viman தொடர்மாடிக் குடியிருப்புத் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்புபவர்கள் மற்றும் அது பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளவர்கள் நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி தொடர்மாடித் திட்டத்தை பார்வையிட முடியும் என்பதுடன், அவர்களுக்குக் காணப்படும் மேலதிகக் கேள்விகளுக்குப் பதில் வழங்க எமது துறைசார் அணியினர் தயாராக இருக்கின்றனர். மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள
070 6 062062 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக John Keells Properties நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும் அல்லது www.viman.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும்.











































Discussion about this post