கல்விசார் வெற்றியை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கொண்டாடிய ISC கல்வி நிறுவன மாணவர்கள்
2024 ஓகஸ்ட், கொழும்பு: சர்வதேச கல்விக்காக தனித்துவப்படுத்தப்பட்ட இலங்கையின் முன்னணி நிறுவனமான International Study Centre (ISC) நிறுவனம், சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பட்டமளிப்பு விழாவில் கல்வியின் சிறப்பு மற்றும் மாணவர்களின் கடும் உழைப்பைக் கொண்டாடியது. 2024 ஓகஸ்ட் 03ஆம் திகதி நடைபெற்ற இந்த விழாவானது ISC மாணவர்கள், பீடம் மற்றும் அதன் பணியாளர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பைப் பறைசாற்றும் வகையில் அமைந்தது. கல்வித் துறையில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பிரதான உரைகள் உள்ளிட்ட பல்வேறு சிறம்பம்சங்களைக் கொண்டதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் உயர்ஸ்தானிகர் மாண்புமிகு திரு.எரிக் வோல்ஷ் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருடைய இந்த வருகை கல்வியின் சிறப்பில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதைப் பறைசாற்றியது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் முகாமைத்துவம் சார்பில் International Study Centre நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹரி பிரசாத் உரையாற்றினார். இவர் இலங்கையிலுள்ள பெலாரூஸ் அரச பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாகவும், சர்வதேச பட்டதாரிகள் சங்கம் – பெலாரூஸின் இலங்கைப் பிரிவின் தலைவராகவும் விளங்குகின்றார். மேலும் நிறுவனத்தின் அதிபரும், தேசிய கண் வைத்தியசாலையின் விரிவுரையாளருமான சஷித அஷந்தி உருக்கமான நன்றியுரை வழங்கினார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட வர்த்தக அதிகாரி திரு.அப்துல் மஜீத் கயூம், International Study Centre நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான இந்துஜா புஷ்பநாதன், International Study Centre நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான ஷனாலி டி.சில்வா உள்ளடங்கலான முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் மாணவர்கள் தமது திறமைகளையும், அனுபவத்தையும் வெளிப்படுத்தியிருந்ததுடன், ISC கல்வி நிறுவனத்தில் மேற்கொண்டுள்ள தமது பயணத்தையும் பகிர்ந்துகொண்டனர். இலங்கையிலுள்ள மாணவர்களின் உயர்ந்த தேர்ச்சி மட்டம் குறித்து ISC கல்வி நிறுவனம் பெருமையடைவதுடன், இது நிறுவனத்தின் கடுமையாக கல்வித் தரம் மற்றும் கற்பதற்கு ஏற்ற சூழல் என்பவற்றுக்குச் சான்றாக அமைகின்றது. இந்த வருட பட்டமளிப்பில் மாணவர்களுக்கு சிறப்பு விருதுகளும், சிறந்த அடைவைப் பெற்ற மாணவர்களுக்கு மெரிட் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பிரிவைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, டுபாய், மலேசியா மற்றும் பெலாரூஸ் போன்ற நாடுகளிலுள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் ஏற்கனவே அனுமதிகளைப் பெற்றுள்ளனர். இந்தப் பட்டமளிப்பு விழாவானது மாணவர்களின் சிறந்த அடைவுகள் மற்றும் இலங்கையில் சர்வதேச கல்வியை உயர்ந்த மட்டத்தில் வழங்குவதில் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை மீண்டும் உறுதிப்படுத்தும் பெருமைக்குரிய தருணமாக அமைந்தது.
சமூக உணர்வைத் தூண்டுவதற்காக பட்டமளிப்பு வாரத்தில் பல்வேறு வேடிக்கை நிறைந்த நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருப்பதால் இந்தப் பட்டமளிப்பு நிகழ்வு ISC கல்வி நிறுவனத்தில் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டியிருந்தது. பெலாரூஸ் பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த கிரிக்கெட் போட்டி 2024 ஓகஸ்ட் 10ஆம் திகதி மு.ப 9.00 மணி முதல் கோட்டை SLLDC கிரிக்கட் மைதானத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் குழுச் செயற்பாடு மற்றும் அவர்களின் உடல் நலனை ஊக்குவிக்கும் வகையில் தற்போதைய மாணவர்கள், கலாநிதிகள், பீடத்தின் பணியாளர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மத்தியில் நடைபெறும் போட்டிகளுக்காக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெலாரூஸ் பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் ஓகஸ்ட் 10ஆம் திகதி பி.ப 7.00 மணக்கு கோல்ஃபேஸ் ஹோட்டல் யுப்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுகள் ஏற்கனவே பெலாரூஸ் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கூட்டாண்மைப் பல்கலைக்கழகங்களில் அனுமதிகளைப் பெற்ற மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களின் பழைய மாணவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பெலாரூஸ் வாழ்க்கையின் விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அறிந்துகொள்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இலங்கை மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வியைத் தொடர்வதற்கு ISC கல்வி நிறுவனம் உதவுவதால் இந்தப் பட்டமளிப்பு நிகழ்வானது கல்விப் பயணத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் அடைவைக் குறிப்பதுடன், கல்வித்துறைசார் முயற்சிகளின் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறப்பதாகவும் அமைகின்றது. உலகளாவிய ரீதியில் நன்மதிப்பைப் பெற்ற பல்கலைக்கழகங்களினால் அங்கீகரிக்கப்படும் கனடாவில் மிகவும் மதிப்பைப் பெற்ற தகுதியான ஒன்டோரியா செக்கன்டரி ஸ்கூல் டிப்ளோமாவை ISC கல்வி நிறுவனம் கனடா அமைச்சுடன் இணைந்து வழங்குவதால் இதன் மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அதிகூடிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்கின்றனர். மாணவர்களின் எதிர்கால அபிலாஷைகளுடன் இணங்கக் கூடிய வகையில் தரம் 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு கலப்பு முறையிலான இரண்டாம்நிலை பாடசாலைத் திட்டம் பல்வேறு பாடநெறிகளை வழங்குகின்றது. இலங்கையின் பரீட்சைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட க.பொ.த உயர்தரத்துக்கு சமாந்தரமான ஒன்டோரியா செக்கன்டரி ஸ்கூல் டிப்ளோமாவானது உலகளாவிய ரீதியில் உள்ள 500ற்கும் அதிகமான பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன், ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அத்துடன், இதன் விஞ்ஞான வழிகாட்டி இலங்கை மருத்துவ சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன், இது க.பொ.த லண்டன் கேம்பிரிஜ் மற்றும் எடெக்ஸல் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுக்குச் சமனானது.
ISC கல்வி நிறுவனம் சர்வதேசக் கல்வியில் கொண்டுள்ள பரந்துபட்ட அனுபவம் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்களுடன் கொண்டுள்ள கூட்டாண்மை காரணமாக இலங்கை மாணவர்கள் அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா மற்றும் பெலாரூஸ் போன்ற நாடுகளில் கற்க வேண்டும் என்ற கனவுகளை நனவாக்கிக் கொள்ள முடியும். கொழும்பின் மையப் பகுதியில் அமைந்துள்ள கம்பஸின் ஊடாக மாணவர்களுக்கு பௌதீக ரீதியான வகுப்புக்கள் முன்னெடுக்கப்படுவதுடன், மாணவர்களுக்குத் தேவையான கற்றல் சூழலும் இங்கு காணப்படுகின்றது. அத்துடன், சரியான பல்கலைக்கழகங்கள், சரியான பாடங்களைத் தெரிவுசெய்தல், அனுமதிப் பரீட்சை, வீசா விண்ணப்பம் தயார்ப்படுத்தல், புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களுக்கு கொழும்பு, மட்டக்களப்பு, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் உள்ள ISC கல்வி நிலையத்தின் வளாகங்களின் ஊடாக மாணவர்களுக்கு வழிகாட்டல்களும் ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் ஒவ்வொரு மாணவரும் நம்பிக்கையான பங்குதாரரான ISC கல்வி நிறுவனத்தைத் தெரிவுசெய்ய வேண்டும். எமது சேவைகள் பற்றி அறிந்துகொள்வதற்கும், உங்களின் கல்விசார் கனவை நனவாக்க எம்மால் எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்ளவும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.












































Discussion about this post