புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தொழில்துறையுடன் சம்பந்தப்பட்ட பாடநெறிகளை வழங்கி துறைசார் நிபுணர்களை வலுப்படுத்தும் SLIIT MSc பட்டப்பாடத்திட்டம்
மாணவர்களுக்கு அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும், தகுதிகளை விஸ்தரிப்பதற்குமான தளத்தை வழங்கும் SLIIT இன் முதுமானி விஞ்ஞான (MSc) பட்டப்பாடத்திட்டம் புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய தொழில்துறையுடன் சம்பந்தப்பட்ட பாடநெறிகளின் ஊடாக துறைசார்ந்த நிபுணர்களை வலுப்படுத்துவதற்கான சிறந்த தீர்வை வழங்குகின்றது.
MSc முதுமானி விஞ்ஞானப் பட்டப்படாத்திட்டமானது பல்வேறு பாடநெறிகளை அதாவது தகவல் தொழில்நுட்பத்தில் MSc, தகவல் முகாமைத்துவம், தகவல் கட்டமைப்பு, சைபர் பாதுகாப்பில் சிறப்பைக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை செயலிகள் உருவாக்கத்தில் சிறப்பைக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் MSc பட்டத்தைப் பெறுவதற்கான பல்வேறு தெரிவுகளைக் கொண்டுள்ளது.
ACU மற்றும் IAU ஆகியவற்றில் கிடைத்துள்ள ங்கத்துவத்தின் அடிப்படையில் SLIIT உலகளாவிய அங்கீகாரத்தினைப் பெற்றிருப்பதால், சர்வதேச சிறந்த நடைமுறைகளுடன் இணங்கும் வகையில், மாணவர்களுக்குப் போட்டித்தன்மையை வழங்கி, அந்தத் துறைகளில் அவர்களை வெற்றிபெற வைப்பதற்கான கடுமையான MSc பாடத்திட்டங்களை வழங்குகின்றது.
தகவல் தொழில்நுட்பத்தில் MSc பட்டப்பாடத்திட்டமானது மென்பொருள் பொறியியல், கணினி வலையமைப்பு, ஈ-வர்த்தக தொழில்நுட்பம், தகவல்தள முகாமைத்துவம் மற்றும் வணிகத் தகவல் கட்டமைப்பு ஆகிய விடயங்களில் விரிவான திறனை வழங்குகின்றது. தகவல் தொழில்நுட்பத்தில் தற்போதைய மற்றும் எதிர்காலத்துக்கான தயாரிப்புக்கள் குறித்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றுவதற்குத் தம்மை ஆயத்தப்படுத்துவதற்கும் இது உறுதுணையாக இருக்கும். தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம் மற்றும் மென்பொருள் பொருளியல் ஆகிய பட்டதாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பட்டப்பாடத்திட்டம் வணிக வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான எதிர்கால டிஜிட்டல் வணிகத் தலைவர்களின் உருவாக்கத்தை ஊக்குவிக்கின்றது.
SLIIT இன் தகவல் முகாமைத்துவத்தில் MSc பட்டப்படாத்திட்டமானது தகவல் தொழில்நுட்பத்தையும், வணிக மூலோபாயங்களையும் ஒருங்கிணைப்பதற்கான திறனை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு வழிவகுக்கின்றது. தகவல் தொழில்நுட்ப மூலோபாயத் திட்டமிடல், தகவல் அறிவாற்றல் மற்றும் நிறுவனங்களுக்கிடையில் பாதுகாப்பான தகவல் முகாமைத்துவத்துக்கான கருவிகள்/தொழில்நுட்பங்களைத் தயாரிக்கக்கூடிய நிபுணர்களை இது உருவாக்கும். இந்தத் திட்டமானது தகவல் தொழில்நுட்பத்திற்காக மூலோபாய தீர்மானங்களை எடுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துக்கான உட்கட்டமைப்பு முகாமைத்துவத்தின் போது விமர்சன சிந்தனையை வளர்க்கும். தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டமானது சரியான தகவல் முகாமைத்துவு முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்யவும், தேர்வு செய்யவும் அவற்றை செயற்படுத்துவதற்கும் தேவையான திறனை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் வணிகத்தின் போக்குகளுக்காக அவர்களைத் தயார்ப்படுத்தும்.
திட்ட முகாமைத்துவம், வளர்ந்துவரும் தொழில்நுடு்பங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஆட்சி போன்ற பிரதானமான விடயங்கள் தொடர்பில் தகவல் அமைப்பில் MSc பட்டப்பாடத்திட்டம் கவனம் செலுத்துகின்றது. இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் அமைப்புகள் மூலம் வணிக செயல்முறைகளை நிர்வகிப்பதற்கான திறன்களைக் கொண்ட மாணவர்களை சித்தப்படுத்துகின்றது. இத்திட்டம் பிரச்சினைகளைத் தீர்த்தல், ஒத்துழைப்பு மற்றும் திட்ட முகாமைத்துவம் போன்றவற்றில் மாற்றத்தக்க திறன்களை வழங்குகின்றது. இதன் மூலம் பட்டதாரிகள் முகாமைத்துவ ஆலோசகர்கள், சிஸ்டம் அனலிஸ்ட்/வடிவமைப்பாளர், தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு முகாமையாளர், வணிக ஆய்வு, தகவல் வடிவமைப்பு ஆகிய பதவிகளை வகிக்க முடியும். இதன் மூலம் கணக்காய்வாளர், பிரதம தகவல் அதிகாரி, பிரதம திறன் அதிகாரி, பிரதம தனிப்பட்ட தகவல் அதிகாரி மற்றும் திட்ட முகாமையாளர் போன்ற உயர் பதவிகளை நோக்கி முன்னேற முடியும்.
சைபர் பாதுகாப்பில் சிறப்பைக் கொண்ட தகவல் தொழில்நுட்பத்தில் MSc பட்டப்படாத்திட்டமானது சைபர் அச்சுறுத்தல்கள் குறித்த உலகளாவிய பிரச்சினைகளைக் கையாள்வதை நோக்காகக் கொண்டது. ஒன்லைன் சேவையில் தங்கியிருப்பது அதிகரித்திருப்பதால் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவை அதிகமாகவுள்ளது. பாதுகாப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தின் தேவையில் ஒன்லைன் சேவைகளில் சார்ந்திருப்பது அதிகரித்துள்ளது. அத்துடன், சைபர் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும் இத்துறையில் நிபுணர்களின் அவசர தேவையை உருவாக்கியுள்ளது. பாதுகாப்பான கணினி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், ஒன்லை ரீதியான அச்சுறுத்தல்களை நிர்வகிப்பதற்கும், வழங்கப்பட்ட வலையமைப்புக்களில் தகவலுக்கான அணுகலை கையாழுதல் போன்ற விடயங்களில் பட்டதாரிகளுக்கு திறன் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது.
தொழில்துறைக்கான செயலிகளை உருவாக்குவதில் சிறப்பைக் கொண்ட தகவல் தொழில்நுட்பத்தில் MSc திட்டமானது, மென்பொருள் வடிவமைப்பாளர்களை இலக்காகக் கொண்டது. பெரும் அளவிலான மென்பொருள் திட்டங்களுக்குத் தேவையான மென்பொருள் பொருளியல் மற்றும் அவற்றைத் தயாரிப்பதற்கான திறன்களை வழங்குகின்றது. இந்தப் பட்டப்பின்படிப்புத் திட்டமானது மென்பொருள் துறைசார் நிபுணர்களின் தொழில் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.
SLIIT இல் வழங்கப்படும் MSc திட்டங்கள் கோட்பாட்டு ரீதியான கற்கை மற்றும் நடைமுறை ரீதியான வெளிப்பாடு என்பவற்றை சமமாகக் கொண்ட அணுகுமுறையுடன் கூடியவையாகும். சிறந்த அனுபவங்கள், நிஜஉலகத் திறன்கள் மற்றும் நுண்ணறிவை மாணவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் SLIIT உறுதியாக உள்ளது. இது உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக் கலாசாரம் மற்றும் உகந்த கற்றல் சூழல் என்பவற்றுடன் இணைந்துள்ளது.
SLIIT MSc திட்டங்கள் ஒரு தனித்துவமான முதுகலை அனுபவத்தை வழங்குவதுடன், இது தொழில்துறைசார் சமகால சவால்களை சமாளிப்பதற்கும், வெற்றிகரமான வாழ்க்கையைத் தொடங்கவும் மாணவர்களுக்கு உதவுகின்றது.
இதற்கு மேலதிகமாக, SLIIT இன் பட்டப்படிப்புத் திட்டங்கள் உண்மையான ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும் புதிய அறிவைக் கண்டுபிடிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளன. தொழில்துறையில் தற்பொழுது காணப்படும் சவால்களுக்கு அர்த்தமுள்ள தீர்வுகளை வழங்குவதை நோக்காகக் கொண்டு இவற்றின் பிரதான விடயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வளர்ச்சிபெற்றுவரும் தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக இந்தத் தீர்வுகள் அமைய வேண்டும். இதனால், SLIIT இன் ஆராய்ச்சி முயற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல என்பதுடன், ஆராய்ச்சி முடிவுகளின் வணிகமயமாக்கல், ஆரம்ப தொழில்முயற்சிகளை வளர்ப்பது மற்றும் தொடர்புடைய தொழில்துறைகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவது போன்றவை வரையில் இது விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒத்துழைப்புகள் மூலம், SLIIT உலகளாவிய போக்கைப் பராமரிக்கும் அதேநேரம், உயர் தேசிய மதிப்பின் தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சியை முன்னெடுக்கின்றது.
SLIIT இன் MSc பட்டப்படாத்திட்டங்கள் மாணவர்கள் தமது வாழ்க்கைத் தொழிலில் அதியுச்சத்துக்குச் செல்வதற்கான கற்றலை மேற்கொள்வதற்கும் தமக்கான வாழ்க்கையில் முன்னேறிச் செல்லும் வகையிலும் வழிகாட்டுகின்றது.
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள www.sliit.lk என்ற இணையத்தளத்தை நாடவும் அல்லது +94(0)11 754 4801 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது info@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளவும்.









































Discussion about this post