சிவராத்திரியை முன்னிட்டு இன்றைய தினம் திருக்கோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இருந்து திருக்கோணேஸ்வரர் ஆலயம் வரையிலான வேகநடை போட்டி காலை 7 மணியளவில் இடம் பெற்றது .
இதில் திருக்கோணமலையின் பல்வேறு அறநெறி பாடசாலைகளை சேர்ந்த மாணவிகளும், பாடசாலை மாணவிகளும் கலந்து கொண்டனர். 13 வயது தொடக்கம் 18 வயது மாணவிகளுக்கான போட்டியாக இது இடம்பெற்றது.
அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஆசீர்வாதம் பெற்று போட்டி ஆரம்பமானது.
சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை மாணவிகள் வெகுநடையில் நடந்து கடந்தனர்.
முதலாவது இடத்தை இரண்டாவது இடத்தை மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டனர். மேலும் 10 மாணவிகளுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகள் அனைவருக்கும் ஆதி யோகி சிவன் சிலையும், சான்றிதழும் வழங்கப்பட்டது. பணப்பரிசல்களும் வழங்கப்பட்டது.
மாணவிகள் அனைவரும் கலாச்சார உடையில் போட்டியில் பங்குகொண்டு நடந்த காட்சி அருமையாக இருந்தது.
இவ்வாறான வேக நடை போட்டி இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும்.





































Discussion about this post