SLICGL, 2024ஆம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாக அதன் கிரீடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது
பரந்த பொதுக் காப்புறுதித் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பொதுக் காப்புறுதிப் பிரிவு (SLICGL), இலங்கையின் மதிப்புமிக்க வர்த்தக வெளியீடான LMDயின் அடிப்படையில், 2024ஆம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாக பெயரிடப்பட்டு அதன் உறுதிப்பாட்டை மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்த அங்கீகாரம், தடையற்ற வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் SLICGLஇன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை மற்றும் நாடு முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிகங்களின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளைப் புரிந்துகொண்டு நிவர்த்தி செய்வதற்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. SLICGL, அனைத்து பிரஜைகளையும் உள்ளடக்கிய வகையில் தனித்துவமான சேவை மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வழங்கல்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பாதுகாப்பு மற்றும் மன அமைதியை வழங்கும் நம்பகமான துணையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் பொதுக் காப்புறுதி வர்த்தக நாமமாக LMDயால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதன் ஊடாக சுமூகமான அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதில் SLICGLஇன் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. SLICGL, அதன் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளின் தொகுப்பை தொடர்ந்து மேம்படுத்துவதன் காரணமாக அனைத்து இலங்கையர்களதும் முதற் தெரிவாக தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.
SLICGL, மாறிவரும் சந்தைக்கு ஏற்றவாறு புதுமைகளை உருவாக்கி அதன் திறனைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. நிறுவனம், நவீன நுகர்வோரின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட காப்புறுதித் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலதிகமாக, SLICGL அதன் போட்டிமிக்க விலை மற்றும் நெகிழ்வான காப்பீடு தெரிவுகளுக்காக அறியப்படுவதோடு, விரிவான பாதுகாப்பை விரும்பும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான கவர்ச்சிகரமான தெரிவாக அமைகிறது.
ஆரம்ப ஆலோசனை முதல் உரிமைகோரல் வரை காப்புறுதி வைத்திருப்பவர்களுக்கு சுமூகமான மற்றும் தடையற்ற அனுபவத்தை உறுதி செய்யும் அதன் அர்ப்பணிப்புள்ள தொழில்வல்லுநர் குழுவின் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஊடாக SLICGLஇன் வெற்றியானது உறுதி செய்யப்படுகிறது.
வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பொதுக் காப்புறுதிப் பிரிவு தொடர்பாக
பொதுக் காப்புறுதியில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் நிதி ஸ்திரத்தன்மையால் ஆதரிக்கப்படும் அதன் பரந்த கோப்புறைகளுக்குப் புகழ்பெற்ற SLICGL, இத்துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமமாக விளங்குகிறது. மோட்டார் காப்புறுதியில் இலங்கையின் சந்தை முன்னோடியாக, SLICGL அதன் பரந்த கிளை வலையமைப்பையும், அனுபவமிக்க விற்பனைப் படையையும் பயன்படுத்தி வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு தனிப்பயனாக்கக்கூடிய தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவைத் தரங்களை வழங்குகின்றது. 142இற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 53 சேவை மையங்களின் ஊடாக மோட்டார், தீயணைப்பு மற்றும் பொறியியல், மருத்துவம், பொது விபத்து மற்றும் கடல்சார் சேவைகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. அரசுரிமை முன்னோடியான SLICஇன் பொதுக் காப்பீட்டுப் பிரிவாக, இடர் பாதுகாப்பில் நாட்டின் முதற் தெரிவாக விளங்கும் அதே வேளை SLICGL, விரைவான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்திற்குத் தயாராக உள்ளது.





































Discussion about this post