வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பொதுக் காப்புறுதிப் பிரிவு , பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி சீசன் 2024ஐ முன்னிட்டு தர்ஸ்டன் கல்லூரி ரக்பியுடன் இணைவதில் பெருமையடைகிறது
வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பொதுக் காப்புறுதிப் பிரிவு (SLICGL), பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி சீசன் 2024இல் பிரிவு Aஇல் கலந்து கொள்ளும் தர்ஸ்டன் கல்லூரி ரக்பியின் உத்தியோகபூர்வ காப்புறுதி பங்காளியாக இணைவதை பெருமையுடன் அறிவிக்கின்றது. இந்த இணைவு, இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும் இலங்கை முழுவதிலும் உள்ள பாடசாலை மட்ட விளையாட்டுக்களின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்குமான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
SLICGLஇன் விரிவான காப்பீடு, விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டுடன் தொடர்புபட்ட அனைத்து துணை ஊழியர்களும் தாங்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்து, எவ்வித கவலைகளும் இன்றி ரக்பி மைதானத்தில் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி சிறப்புற செயற்பட உதவும். இதற்கான அனுசரணை அண்மையில் நடந்த விசேட நிகழ்வில் தர்ஸ்டன் கல்லூரி மற்றும் அதன் ரக்பி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
ரக்பி போன்ற விளையாட்டுகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குவதில் காப்புறுதி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை SLICGL புரிந்துகொள்கிறது. குறிப்பாக, இளம் விளையாட்டு வீரர்கள் விளையாட்டுக்களில் பங்கேற்பதால் ஒழுக்கம், குழுப்பணி மற்றும் மனவுறுதி போன்ற மதிப்புமிக்க வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். பரந்த அளவிலான காப்பீட்டை வழங்குவதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு காயங்கள் ஏற்படும் போது நிதி நெருக்கடியின்றி கவனிப்பை பெறுவதை SLICGL உறுதி செய்கிறது. மேலும் காப்பீடு, அபாயங்களை குறைக்க உதவுவதால் எல்லா வயதினரும் விளையாட்டுக்களில் பங்கேற்பதை எளிதாக்குகிறது.
தர்ஸ்டன் கல்லூரி ரக்பி மூலம் SLICGL எதிர்கால விளையாட்டு வீரர்களை பாதுகாக்கும் பாரம்பரியத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டின் சிறப்பை மதிக்கும் சமூகத்தை உருவாக்கும் அதேவேளை பங்கேற்பாளர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கின்றது. தனிநபர்கள் மற்றும் சமூகங்களை மாற்றும் சக்தி விளையாட்டிற்கு உள்ளதென்பதை நிறுவனம் நம்புவதுடன், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறது.
பட விளக்கம்: (இடது முதல் வலது வரை) – ரவி மெடிஸ், சிரேஷ்ட முகாமையாளர், பொதுத்துறை, பெருநிறுவன வணிகப் பிரிவு, SLICGL; மகேஷ் கமகே, உதவிப் பொது முகாமையாளர், பெருநிறுவன வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல், SLICGL; பமுதித விக்கிரமசிங்க, அதிபர், தர்ஸ்டன் கல்லூரி; அச்சல ராமநாயக்க, தலைவர் தர்ஸ்டன் ரக்பி கழகம் மற்றும் சுதேஷ் பிரியங்கர கோமஸ், செயலாளர், தர்ஸ்டன் ரக்பி கழகம்.





































Discussion about this post