சியபத பினான்ஸ் பிஎல்சி, ‘தெவிநுவர எசல பெரஹர’விற்காக அறிவுறுத்தல் பலகைகளை பொலிஸாருக்கு நன்கொடையாக வழங்கியது.
சியபத பினான்ஸ் பிஎல்சி அதன் வருடாந்த சமூகப் பொறுப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் முடிவடைந்த ‘தெவிநுவர எசல பெரஹெர 2024’க்கு இணங்க, கந்தர பொலிஸாருக்கு “No Parking” அறிவுறுத்தல் பலகைகளை நன்கொடையாக வழங்கியது. விஷ்ணு தெய்வத்தை வணங்கிக் கொண்டாடப்படும வருடாந்திரத் திருவிழாவான எசல பெரஹரவைக் கண்டுகளிப்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான இந்து மற்றும் பௌத்த மக்கள், அங்கு வருகை தருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும், தெவிநுவர எசல பெரஹரா, நடனம், இசை, வண்ணங்கள், யானைகள் அணிவகுப்பு என நமது தேசத்திற்கு தனித்துவமான பாரம்பரிய நிகழ்வுகளால் தெருக்களை அலங்கரிக்கிறது. ஊர்வலத்தின் போது பொலிஸாரின் போக்குவரத்து கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் பலகைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. மாத்தறை சியபத பினான்ஸ் பிஎல்சியின் கிளை முகாமையாளர் திரு. ஜனக விபுலவினால் கந்தர பொலிஸ் அலுவலகத்தின் தலைமையக பொலிஸ் அதிகாரி தேசபந்து சேனரத்னவிடம் அவை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
சம்பத் வங்கிக் குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் கிளை வலையமைப்பைக் கொண்டுள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. கடந்த 19 வருடங்களாக, இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தொழில்முனைவோர், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் போன்ற பலருக்கு வலுவூட்டி வருகிறது.






































Discussion about this post