SLIC ஜெனரல் மற்றும் RDB தடையற்ற காப்புறுதி அணுகலுக்கான வங்கி காப்பீட்டு கூட்டாண்மையை உருவாக்க கைகோர்க்கின்றன
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோர்பரேஷன் ஜெனரல் லிமிடெட் (SLICGL) நிறுவனம் பூரண காப்பீட்டை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அணுகல் மற்றும் வசதியை உறுதி செய்வதற்காக அபிவிருத்தி நிதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னணி நிதி நிறுவனமான பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் (RDB) ஒரு மூலோபாய வங்கி காப்பீட்டு பங்காளித்துவத்தில் இணைந்துள்ளது.
இரு நிறுவனங்களினதும் உயர்மட்ட நிர்வாகப் பிரதிநிதிகளின் முன்னிலையில், அண்மையில் களனியில் உள்ள RDB தலைமை அலுவலகத்தில் இந்த சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கைச்சாத்திடப்பட்டது. இந்த மைல்கல் நிகழ்வு, கிராமப்புற மக்களுக்கு அணுகக்கூடிய சிக்கன விலையில் காப்பீட்டு சேவைகளை வழங்கி கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியை குறிக்கிறது.
இந்த வங்கி காப்பீட்டு கூட்டாண்மை மூலம், SLICGLஇன் பல்வேறு வகையான காப்பீட்டு சேவைகளை RDBஇன் நாடு தழுவிய கிளை வலையமைப்பு மூலமாக பெற்றுக்கொள்ளலாம். இன்றுவரை, நாடு முழுவதுமான 272 கிளைகள் ஊடாக RDB ஆனது ஆறு மில்லியனுக்கும் அதிகமான விசுவாசமான கணக்கு வைத்திருப்பவர்களைக் கொண்டுள்ளது. இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது மோட்டார், தீ மற்றும் பொதுக் காப்பீட்டுக் கொள்கைகள் உள்ளிட்ட காப்பீடுகளை வசதியாகப் பெறலாம்.
பிரஜைகளின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதுமையான, நம்பகமான, வசதியான மற்றும் அணுகக்கூடிய காப்பீட்டுத் தீர்வுகளை வழங்குவதற்கான SLICGLஇன் உறுதிப்பாட்டுடன் இந்த இணைவு ஒத்துப்போகிறது. RDBஇன் பரந்த கிளை வலையமைப்பு மற்றும் நம்பகமான நிதி நிறுவனமாக அங்கீகாரம் ஊடாக SLICGL ஆனது அதிக வாடிக்கையாளர்களை சென்றடையக்கூடிய அதேவேளை அனைத்து சமூகங்களுக்கும் ஒரு பூரண காப்பீட்டு சேவையுடன் வரும் மன அமைதியை வழங்க முடியும்.
மேலும், SLIC ஜெனரலுடனான கூட்டாண்மையானது RDBஇன் சேவைத் தொகுப்பை விரிவுபடுத்துவதோடு சமூகத்தில் நன்மையான தாக்கத்தை உறுதிசெய்யும் வங்கிச் சேவைகளை நெறிப்படுத்தும் நிதியாளர்களாக பூரண காப்பீட்டை வழங்க சந்தர்ப்பம் அளிக்கிறது.
SLICGL மற்றும் RDB ஆகிய இரண்டுக்கும் இந்த மூலோபாய வங்கி காப்பீட்டு கூட்டாண்மை அவர்களது வணிக கோப்புறையை பலப்படுத்தவும் பரந்துபட்ட வாடிக்கையாளர்களை அணுகவும் அனுமதி அளிக்கிறது. மேலும், இது கொழும்பிற்கு வெளியே வசிப்பவர்களுக்கு நிதிசார் சேவைகளை விரிவுபடுத்தும் அதே நேரம் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துகிறது.

பட விளக்கம்: RDBஇன் தலைவர் W.A.D.S. குணசிங்க மற்றும் SLICGLஇன் பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த பெரேரா ஆகியோர் இரு நிறுவனங்களினதும் பிரதிநிதிகள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோர்பரேஷன் ஜெனரல் லிமிடெட் தொடர்பாக
பொதுக் காப்புறுதியில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் நிதி ஸ்திரத்தன்மையால் ஆதரிக்கப்படும் அதன் பரந்த கோப்புறைகளுக்குப் புகழ்பெற்ற SLICGL, இத்துறையில் மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமமாக விளங்குகிறது. மோட்டார் காப்புறுதியில் இலங்கையின் சந்தை முன்னோடியாக, SLICGL அதன் பரந்த கிளை வலையமைப்பையும், அனுபவமிக்க விற்பனைப் படையையும் பயன்படுத்தி வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு தனிப்பயனாக்கக்கூடிய தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவைத் தரங்களை வழங்குகின்றது. 142இற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 53 சேவை மையங்களின் ஊடாக மோட்டார், தீயணைப்பு மற்றும் பொறியியல், மருத்துவம், பொது விபத்து மற்றும் கடல்சார் சேவைகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. அரசுரிமை முன்னோடியான SLICஇன் பொதுக் காப்பீட்டுப் பிரிவாக, இடர் பாதுகாப்பில் நாட்டின் முதற் தெரிவாக விளங்கும் அதே வேளை SLICGL, விரைவான வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்திற்குத் தயாராக உள்ளது.





































Discussion about this post