இலங்கையில் இளம் தலைமுறையினரின் தகவல்களை வெளிக் கொணரும் Kantar Lighthouse 2023 அறிவுப்பகிர்வு நிகழ்வு முன்னெடுப்பு
Generation Z பற்றி வர்த்தக நாமங்களுக்கு இலகுவாக புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக, இலங்கையின் முன்னணி கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்களுடன் வணிக மாநாட்டை Kantar ஸ்ரீ லங்கா ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு, இலங்கை, பெப்ரவரி 2024 – KANTAR ஸ்ரீ லங்கா தனது வருடாந்த அறிவு பகிர்வு நிகழ்வான KANTAR LIGHT HOUSE 2023 ஐ, சினமன் லேக்சைட் ஹோட்டலின் கிங்ஸ் கோர்ட்டில் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையின் இளம் தலைமுறையினர், Gen Z பராயத்தினர் தொடர்பில் உள்ளார்ந்த தகவல்களை பகிர்ந்து கொண்டு, வர்த்தக நாமங்கள் தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் ஒட்டு மொத்த வியாபார கட்டமைப்புகளில் நிலவும் முக்கிய போக்குகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தது.
இந்த மாநாட்டில் இலங்கையில் பிரசன்னத்தைக் கொண்டுள்ள பல்வேறு வர்த்தக நாமங்களின் முன்னணி தலைமைச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்றிருந்தனர். Kantar APAC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி லியுங் சியொங் தாய், Kantar தெற்காசியா, உள்ளார்ந்த தகவல் பிரிவின் நிறைவேற்று முகாமைத்துவ பணிப்பாளர் தீபேந்தர் ரானா மற்றும் Kantar தெற்காசியாவின் நிறைவேற்றுக்குழு ஆகியோர் நிகழ்வின் விசேட அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், Kantar ஸ்ரீ லங்காவின் தலைமை அதிகாரி ஹிமாலி மதுரசிங்க குறிப்பிடுகையில், மக்களின் தற்போது நிலவும் மனநிலையை புரிந்து கொண்டு செயலாற்றுவதன் முக்கியத்துவம் பற்றி விளக்கியிருந்தார். அண்மைய வருடங்களில் தனிநபர்கள் எதிர்கொண்டிருந்த பல்வேறு அனுபவங்கள் தொடர்பில் அவர் குறிப்பிட்டதுடன், நடத்தைகளில் எவ்வாறு அவை தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என்பது பற்றியும் கூறினார். “இதனால் வியாபாரங்களில் ஏற்பட்ட தாக்கம் என்பது தொடர்வதாக அமைந்திருப்பதுடன், மூன்கூட்டிய திட்டமிடல் அல்லது எதிர்பார்ப்பு போன்றன தொடர்பில் பெருமளவில் எதுவும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. சில துறைகள் நேர்த்தியான போக்கை காண்பித்திருந்தாலும், கடந்த காலங்களில் காணப்பட்ட சாதனை மட்டங்களை எய்துவதற்கான பயணம் என்பது படிப்படியானதாகவே அமைந்திருக்கும்.” என்றார்.
மதுரசிங்க விளக்கமளிக்கையில், மேம்பட்டுவரும் சூழல்கட்டமைப்பில், நுகர்வோரின் புரிந்துணர்வு என்பதில் அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. “குறிப்பாக, Gen Z ஐச் சேர்ந்தவர்கள் பணியாளர் குழுவினுள் ஒன்றிணைக்கப்படுவதனூடாக, பிரத்தியேகமான மற்றும் நடத்தை போக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், வர்த்தக நாமங்களுக்கும் அவற்றின் காப்பாளர்களுக்கும் அதிகளவு சிந்தனையுடனான கவனத்தில் கொள்கையை வலியுறுத்துகின்றன.” என்றார். Kantar இன் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து, இந்த சூழலில் பெறுமதி வாய்ந்த தகவல்களை பெற்றுக் கொடுப்பதில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்புடனான செயற்பாடு, தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றார்.
Kantar APAC இன் பிரதம நிறைவேற்று அதிகாரி லியுங் சியொங் தாய், நிகழ்வில் ஒன்றுகூடியிருந்தவர்களுடன் கண்டறிந்த தகவல்களை பகிர்ந்திருந்ததுடன், APAC பிராந்தியத்தில் நிலவும் மூன்று போக்குகள் பற்றிய தெளிவுபடுத்தலை ஏற்படுத்தியிருந்தார். இந்த போக்குகளை அவர், “குறைந்த அம்சங்களுடன் அதிகளவு செயற்பாடுகளை மேற்கொள்ளல், எதிர்காலத்துக்காக வர்த்தக நாமங்களை கட்டியெழுப்புவதற்கு பயின்றதை பகிர்வது மற்றும் சிறந்ததை மேற்கொள்வதனூடாக சிறப்பாக இயங்குவது போன்ற அம்சங்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.
தெற்காசிய உள்ளார்ந்த பிரிவின் நிறைவேற்று முகாமைத்துவ பணிப்பாளர் தீபேந்திர ரானா தமது உரையின் போது, KANTAR இனுள் artificial intelligence ஐ ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில், “KANTAR and Artificial Intelligence – Future is Here” எனும் தலைப்பில் விளக்கமளித்திருந்தார். AI இனால் மனித ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்ள பங்காற்றப்படும் நிலையில், “Generative AI = Humanizing EI (Enhanced Intelligence)”க்காக இந்த தொழில்நுட்பம் எவ்வாறு திறவுகோலாக அமைந்துள்ளது என்பதை ரானா விளக்கியிருந்தார்.
நிகழ்வின் முக்கிய கவனத்தை ஈர்த்த அம்சமாக, தகவல்கள் மற்றும் உள்ளார்ந்த அம்சங்களை பகிர்ந்து கொள்வது அமைந்திருந்ததுடன், GEN Z – Unraveled எனும் தொனிப்பொருளில் அவை பற்றி ஆராயப்பட்டன. சிவானி சேனநாயக்க மற்றும் நுவனி ஜயசூரிய ஆகியோர் பார்வையாளர்களுக்கு முக்கியமான விளக்கங்களை வழங்கியிருந்தனர். 11 முதல் 26 வயது வரையான Gen Z தலைமுறையினர், எமது ஆய்வில் முக்கிய அங்கம் பெற்றிருந்தனர். 15 – 26 வயதுக்குட்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது. மொத்த சனத்தொகையில் 23% ஆனவர்கள் இந்தப் பராயத்தைச் சேர்ந்தவர்களாக அமைந்துள்ளனர். இந்த Gen Z பராயத்தை சேர்ந்தவர்கள் alchemists ஆக அமைந்திருப்பதுடன், இலங்கையின் சமூக வழமைகளில் மாற்றங்களை ஏற்படுத்திய வண்ணமுள்ளனர். Gen Z ஐச் சேர்ந்தவர்களை சில சந்தர்ப்பத்தில் புரிந்து கொள்ள முடியாதிருப்பதுடன், புதிரை பிரதிபலிப்பதாகவும் இவர் அமைந்துள்ளனர். சிக்கலான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட அடையாளத்தை பல்வேறு பிரிவுகளில் கொண்டிருந்தனர். எமது இனங்காணலின் போது, இந்தத் தலைமுறையினரை ஐந்து பிரீவுகளில் வகைப்படுத்தியிருந்தோம். அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாக இது அமைந்திருந்தது”. அவையாவன Neo-Traditional, Aspirant, Go-Getter, Phygital (Physical and Digital) மற்றும் Explorer ஆக அமைந்திருந்ததுடன், Gen Z தொடர்பான தெளிவான புரிந்துணர்வை பெற்றுக் கொள்ள உதவியது.
அவர்களுக்குரிய நடத்தைகளை மாத்திரம் உறுதி செய்வதாக இந்த ஆய்வு அமைந்திராமல், புதிய இயலுருத்தோற்றங்கள், வலுவூட்டும் சந்தைப்படுத்துநர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு தகவல் அறிந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான கண்டறிதல்களை வழங்கி அவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தது. Gen Z மற்றும் Gen Y பராயத்தினர் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50% ஆக கா










































Discussion about this post