கொழும்பு நகர மண்டபத்தில் தனது புதிய காட்சியறை மூலம் பாதணி விற்பனை அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும் DSI
இலங்கை, கொழும்பு, செப்டெம்பர் 10, 2024: இலங்கையின் முதலிடத்தில் உள்ள பாதணி வர்த்தக நாமமான DSI, கொழும்பு 02, நகர மண்டபத்தில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட காட்சியறையை பிரமாண்டமாக திறந்து வைத்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது. இது இலங்கையில் பாதணிகள் விற்பனை அனுபவத்தை மீள்வரையறை செய்வது தொடர்பான DSI இன் பயணத்தில் முக்கிய மைல்கல் ஆகும்.
மீள்புதுப்பிக்கப்பட்ட இந்த காட்சியறையானது அனைவரினதும் மனதைக் கவரும் நவீன உட்புற தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த காட்சியறையானது, ஸ்டைலையும் அதன் செயற்பாட்டையும் தங்கு தடையின்றி ஒருங்கிணைப்பதோடு, வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடிய சூழலை ஏற்படுத்துகிறது. மேம்பட்ட வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் தயாரிப்புகளை தெளிவாக தெரிவு செய்வதை அடிப்படையாகக் கொண்ட, புதுப்பிக்கப்பட்ட இந்த காட்சியறையானது, வாடிக்கையாளர்களுக்கான ஒட்டுமொத்த கொள்வனவு அனுபவத்தை மேம்படுத்தும் அதே வேளையில், DSI இன் விற்பனை மட்டத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், DSI Samson குழுமத்தின் கௌரவ முகாமைத்துவ பணிப்பாளரான அதன் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி குலதுங்க ராஜபக்ஷ, DSI Samson குழுமத்தின் குழும முகாமைத்துவ பணிப்பாளர் கசுன் ராஜபக்ஷ, D Samson & Sons தலைவர் நந்ததாச ராஜபக்ஷ, D Samson & Sons முகாமைத்துவ பணிப்பாளர் துசித்த ராஜபக்ஷ, D Samson & Sons பணிப்பாளர் அசங்க ராஜபக்ஷ, D Samson & Sons பொது முகாமையாளர் பிரதீப் சமரதுங்க, சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் ஹரித இந்தீப, D Samson & Sons தேசிய விற்பனை முகாமையாளர் நளீன் வீரவர்தேன, நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
DSI நிறுவனமானது கடந்த சில வருடங்களாக மும்முரமான விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அந்த வகையில், இந்த காட்சியறையானது நாடு முழுவதும் நிறுவனத்தால் நிறுவப்பட்ட புதிய விற்பனை நிலையங்கள் மற்றும் காட்சியறைகளில் ஒன்றாகும். D Samson & Sons (Pvt) Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளர் துசித ராஜபக்ஷ இங்கு தெரிவிக்கையில், “இலங்கையில் பாதணி விற்பனை அனுபவத்தை மீள்வரையறை செய்யும் எமது பணியில் ஒரு முக்கிய படியாக, எமது புதிய காட்சியறையை நகர மண்டபத்தில் திறந்து வைப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். புதுப்பிக்கப்பட்ட இந்தக் காட்சியறையானது, மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சூழலை வழங்குகிறது. இந்த காட்சியறையானது, இலங்கையில் பாதணி விற்பனைக்கு ஒரு புதிய தரநிலையை அமைக்கும் என நாம் நம்புகிறோம்,” என்றார்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை கொண்டாடும் வகையில், புதிய காட்சியறைக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு DSI பிரத்தியேகமான சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குகிறது. அது மாத்திரமன்றி, இக்காட்சியறையின் முதல் 100 வாடிக்கையாளர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு வீட்டினுள் வளர்க்கும் ஒரு செடி வழங்கப்படவுள்ளது.
அனைத்து பாதணி ஆர்வலர்களையும் 525, யூனியன் பிளேஸ், கொழும்பு 02 இல் உள்ள புதிதாக புதுப்பிக்கப்பட்ட காட்சியறைக்குச் சென்று, ஒவ்வொரு காலடியிலும் புதிய தோற்றத்துடன் DSI எவ்வாறு புரட்சியை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவிக்குமாறு நிறுவனம் அழைப்பு விடுக்கிறது.
இலங்கையில் பாதணி உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் திகழும் D. Samson & Sons (Pvt.) Ltd ஆனது, U Softo, Ranpa, Samsons, DSI Supersport, Beat, Beach, Petalz, Fun Souls, Tamik, Waves, Jessica, Picasso, Petalz, Islander, AVI உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பாதணி வர்த்தக நாமங்களின் ஒரே விநியோகஸ்தராக இருந்து வருவதோடு, Clarks, Redtape, Reebok, Puma, Fila, U.S. Polo, Adidas, Arrow, W, Modare, Inc.5, Aurelia, Asics, Von Wellx போன்ற பிரபலமான சர்வதேச வர்த்தகநாமங்களையும் அது சந்தைப்படுத்தி வருகின்றது.














































Discussion about this post