ITC ரத்னதீப – பொறுப்புமிக்க ஆடம்பரத்தின் அற்புதமான சின்னம் கொழும்பில் பிரண்மாண்டமாகத் திறக்கப்பட்டது
352 அறைகளைக் கொண்ட ITC ஹோட்டலானது உலகத் தரமான உணவுகள் மற்றும் குடிபானங்களுடன் கூடிய கொழும்பு வானலையின் மாணிக்கப் படிகம்
2024 ஏப்ரல் 25 கொழும்பு – ITC Limited நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான WelcomHotels Lanka (Private) Limited நிறுவனத்தினால் திறந்துவைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப ஆடம்பர ஹோட்டல் தொகுதி இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை வளப்படுத்துவது என்ற உறுதிப்பாட்டுடன் கொழும்பில் விண்ணைத் தழுவும் மாணிக்கப் படிகமாக மிளிர்கின்றது. ITC ஹோட்டல் குழுமத்தின் விருந்தோம்பலின் பிரதான சின்னமாக விளங்கும் ITC ரத்னதீப ஆடம்பர ஹோட்டல் தொகுதி, இலங்கை ஜனநாயகச் சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில், கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மை தங்கிய சந்தோஷ் ஷா மற்றும் ITC Ltd இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் சஞ்ஜீவ் பூரி ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்றையதினம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.
இலங்கையின் தேசிய மலரான நீல அல்லி மலரிடமிருந்து கிடைத்த அகத்தூண்டலக்கு அமைய அதன் கலையம்சங்களை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த ஆடம்பரம் மிக்க இடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ITC ரத்னதீப அல்லது “இரத்தினங்களின் தீவு” விருத்தினர்களுக்காக 352 அறைகள், கூடத் தங்களை (Suite) மற்றும் தொடர்மாடி வீடுகள் (apartments) ஆகியவற்றைக் கொண்டமைந்திருப்பதுடன், ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள பல்கணிகள் கடற்கரையின் அற்புதமான காட்சியை உங்கள் கண்முன்னால் கொண்டுவரும். இந்த ஆடம்பர ஹோட்டல் தொகுதியின் ஒரு பக்கம் இந்து சமுத்திரத்தின் கரையோரமும், மறுபக்கம் பேர வாவியும் அமைந்திருப்பதுடன், ITC ரத்னதீப ஹோட்டல் தொகுதி மற்றும் Sapphire Residences ஆடம்பர தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதி ஆகிய இரு நட்சத்திர கோபுரங்களும் சிறந்த விருந்தோம்பலை வழங்குகின்றன. 100 மீற்றர் உயரத்தில் இந்த இரண்டு கோபுரங்களையும் இணைக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘அஹச’ வான் பாலம் கட்டடக் கலையின் சிறப்பம்சத்தைப் பறைசாற்றுகின்றது.
ITC ரத்னதீப திறப்புவிழாவில் கருத்துத் தெரிவித்த ITC Limited நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு.சஞ்ஜீவ் பூரி குறிப்பிடுகையில், “நுகர்வோர் பொருட்கள், ஹோட்டல்களகாகித அட்டைகள் மற்றும் பொதியிடல், வேளாண்மை வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு வணிகங்களைக் கொண்ட இந்தியாவின் முன்னணிக் குழுமங்களில் ஒன்றே ITC ஆகும். நிலத்தில் வேறூன்றுதல் மற்றும் பிராந்தியத்தின் தனித்துவமான கட்டடக்கலை, வலுவான காலாசரம் மற்றும் மகத்துவத்தைப் பிரதிபலித்தல் என்ற ITC ஹோட்டல்களின் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு இந்தக் கம்பனி கடந்த பல வருடங்களில் இந்தியா முழுவதும் தனித்துவ சின்னங்களாக விளங்கும் ஆதனங்களை உருவாக்கியுள்ளது. இந்த உலகத்தரம் வாய்ந்த ஹோட்டல்கள் உலகளவில் புகழ்பெற்ற உணவுகள், சிறந்த தரத்திலான சேவைகள் மற்றும் பெறுப்பு வாய்ந்த ஆடம்பரம் என்பவற்றை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்கின்றன.
கொழும்பில் பிரம்மாண்டமான ITC ரத்னதீப ஹோட்டல் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பது எமக்கு மகத்தான பெருமையளிக்கின்றது. இலங்கையின் பெருமைக்குரிய கட்டடக்கலை மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த முன்னணி ஹோட்டல், வணிக ரீதியா மற்றும் பொழுதுபோக்கு நோக்கத்திலான விருந்தினர்களுக்க அசாதாரணமான ஆடம்பர விருந்தோம்பல் அனுபவத்தை உருவாக்கும். ITC ஹோட்டல்களில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட உணவு வகைகள், ITC ரத்னதீபவில் சிறந்த உணவு அனுபவங்களின் தொகுப்பிற்கான பெருமையை அளிக்கும். ‘உள்ளூர் அன்பு’ என்ற உள்நாட்டு உணவுகளை ஊக்குவிக்கும் ITC ஹோட்டல்களின் முயற்சியின் ஊடாக புகழ்பெற்ற சமையல்கலை நிபுணர்கள் இலங்கையின் புராதன சமையல் மரபுகள் மற்றும் உள்நாட்டு உணவுகளில் இருந்து உத்வேகம் பெறுவதற்கு வழியை ஏற்படத்தும். நிலைபேறான தன்மையில் உலகின் சிறந்த உதாரணமாக ITC விழங்குவதுடன், எரிசக்தி நுகர்வின்போது கார்பன் வெளியேற்றம் இல்லாத உலகின் முதல் 12 ஆதனங்களில் ஒன்றாகவும், பூச்சிய குடிநீர் பயன்பாட்டு சமநிலையைக் கொண்ட முதல் 4 ஆதனங்களில் ஒன்றாகவும் ITC ஹோட்டல்கள் சான்றிதழ் பெற்றுள்ளன. உலகளாவிய அளவில் தரப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் நடைமுறைகளுடன், அமெரிக்க பசுமைக் கட்டட கவுன்சிலின் LEED Platinum சான்றளிப்புத் தரங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இத்திட்டத்தின் மூலம் கம்பனியின் நிலைபேறு தன்மைக்கு நற்சான்றிதழ் கிடைத்துள்ளது” என்றார்.
இலங்கையின் அழகு மற்றும் பெருமையான கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அவை குறித்து கவனத்தில் எடுக்கப்பட்டு ITC ரத்னதீப அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று, தற்காலத்துக்குப் பொருத்தமான கற்பனைக்கு ஏற்ற அழகைக் கொண்டு வருகின்றது. இதில் கட்டட வடிவமைப்பு, சமையல் கலைகள் மற்றும் கலை ரீதியான வெளிப்படுத்தல்கள் மூலம் இலங்கையின் உள்நாட்டு பாரம் பரியங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. சஞ்சய செனவிரத்ன, பிரசாத் ஹெட்டியாராச்சி, லக்கி சேனாநாயக, டொமினிக் சன்சோனி உள்ளிட்ட இலங்கைக் கலைஞர்களின் படைப்புத் திறன்களினால் ITC ரத்னதீப ஹோட்டல் தொகுதியின் பொதுவான பகுதிகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
நேர்த்தியான தங்குமிடத்திற்கு மேலும் வசதிகளை வழங்கும் வகையில் ITC ரத்னதீப, உள்நாட்டு, தேசிய மற்றும் உலகளாவிய உணவு குடிபானங்களுக்கு 9 தனித்துவமான இடங்களை ஏற்பாடு செய்துள்ளது. உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற உணவுகளுக்கான தெரிவுகளைக் கொண்ட Peshawri, உணவகம் வடமேற்கு பகுதியில் புகழ்பெற்ற உணவுகளை வழங்கும் விருதுபெற்ற உணவகமாகும். ஆசியாவில் சிறந்த உணவகமாக கருதப்படும் Avartana, உணவு வகைகளுக்குப் புதிய விளக்கத்தை வழங்குகின்றது. ரத்னதீபவின் Indian Ocean Pavilion பகுதியானது, சிறந்த புஃபே உணவுத் தெரிவுகளுடன் இந்து சமுத்திரத்தின் சிறந்த கண்கவர் காட்சியையும் வழங்குகின்றது. இங்கு காணப்படும் ஏனைய உணவு வகைகளின் வர்த்தக நாமங்களில் சீனாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தான காலத்துக்கு ஏற்ற Yi Jing உணவு ரெசிப்பிகள், சிறந்த கடல் வளத்தின் சுவைகளைப் பறைசாற்றும் Islander, இலங்கையின் உயர்ந்த ஹை டீ கலாசாரத்தைக் கொண்டாடும் Silvertips, வெப்பமண்டலத்தைச் சார்ந்த புதிய ஜூஸ் மற்றும் ஆரோக்கியமான உணவுகளுக்கான Jala Anganaya என்பன அடங்குகின்றன. ‘வான் பாலத்தில்” வடிவமைக்கப்பட்டுள்ள டியச மற்றும் டழரபெந மூலம் கொழும்பு நகரின் காட்சிகளை உங்களுக்குக் கொண்டு வருவதற்கான இடத்தை தயார் செய்துள்ளது. இது அடிவானத்தில் சூரியன் மறைதல் உள்ளிட்ட 360 பாகையில் அற்புதமான காட்சிகளைப் பார்வையிடக் கூடிய வகையில் பொறியியலின் தலைசிறந்த தன்மையை வெளிப்படுத்தும் இடமாக அமைகின்றது.
இலங்கையின் பண்டைய சமையல் பாரம்பரியங்கள், அதன் கலாச்சார தாக்கங்கள் மற்றும் மதிப்புகள, உள்ளூர் உணவுகளின் வளமான பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாத்து, உள்ளூர் உணவுகள் மற்றும் பானங்களை மேம்படுத்துவதில் ITC ஹேர்டடல்களின் அர்ப்பணிப்பு அதன் புகழ்பெற்ற சமையல்காரர்களின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. அத்துடன், சமையல் பொருட்களுக்கான உள்நாட்டு விற்பனையாளர்களை உருவாக்குவதற்கும், இறக்குமதிகளைக் குறைப்பதற்கும், பொறுப்பான ஆதாரங்கள் மற்றும் குறைந்த புகைவெளியேற்றம் என்பவற்றுக்கும் பங்களிப்புச் செலுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கையின் மகத்தான சுற்றுலாத் திறன் மற்றும் அதன் தேவைகளை உணர்ந்து MICE மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை ITC ரத்னதீப இலக்காகக் கொண்டுள்ளது. 40000 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட ITC ரத்னதீபவின் விருந்து மண்டபம் மற்றும் அதற்கான உணவுகள் இந்த நோக்கத்துக்கு அர்த்தமளிக்கின்றன. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உணவு மற்றும் செயற்பாட்டு இடங்கள் பெருநிறுவனங்களின் ஒன்றுகூடல்கள், திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ITC ரத்னதீப ஹோட்டல் பெருத்தமானது என்பதைப் பறைசாற்றுகின்றன. இந்த வசதிகளில் பிரத்தியேகமான Sangam Ballroom 15,000 சதுர அடி விஸ்தீரணத்தில் தூண்கள் அற்ற விருந்து மண்டபம் மற்றும் Panorama Deck வெளியக திருமண இடம் என்பனவும் அடங்குகின்றன.
சிறந்த விருந்தோம்பல் அனுபவங்களுக்கு அப்பால், விவேகமான நுகர்வோருக்கு சிறந்த சொகுசு குடியிருப்புக்களையும் இத்திட்டம் வழங்குகின்றது. Sky Mansions (வான் மாளிகை) என்ற எண்ணக்கருவை தெற்காசியாவுக்கு அறிமுகப்படுத்தும் Sapphire Residences ஆனது, ITC ரத்னதீப ஹோட்டல் வளாகத்திற்கு அருகாமையில், கொழும்பில் மிகவும் கண்கவர் கடல் காட்சியை ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ள ஆடம்பரமான மற்றும் விசாலமான அடுக்குமாடி குடியிருப்புக்களைக் கொண்ட தொகுதியாகும். இந்து சமுத்திரத்தை 180 பாகையில் பார்வையிடக் கூடிய வகையில் கொழும்பில் அமைந்துள்ள நிகரற்ற சொகுசு தொடர்மாடிக் குடியிருப்புக்கள் அதன் குடியிருப்பாளர்களுக்குத் தடையற்ற காட்சிகளை வழங்குகின்றது.
இங்கு ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்குத் தனியான இடம் உருவாக்கப்பட்டிருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். வணிகத்திற்காகவோ அல்லது ஓய்வுக்காகவோ வருவோருக்கு ITC ரத்னதீப தனியார் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதிகளை வழங்குகிறது.
பொறுப்பு வாய்ந்த ஆடம்பரம் என்ற பாரம்பரியத்தை ITC ஹோட்டல்கள் முன்னோக்கிக் கொண்டு செல்வதுடன், காலநிலைக்கு ஒப்பான அணுகுமுறைக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் தரப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் பரிமாணங்களுடன் ITC ரத்னதீப வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து கட்டுமானம் நடைபெற்ற காலம் மற்றும் தற்போது அதன் செயற்பாடு என்பவற்றில் நிலைபேறு தன்மை என்பது ITC ரத்னதீபவில் முக்கிய புள்ளியாகக் காணப்படுகின்றது. ஆற்றல் மற்றும் நீர் செயல்திறன், நிலையான வளர்ச்சி, உட்புற சுற்றுச்சூழல் நிலைமைகளை உறுதிப்படுத்தும் சூழலுக்கு நட்பான பொருட்களின் பயன்பாடு என்பனவும் இதில் அடங்குகின்றன.
ITC ஹோட்டல்களின் வரிசையில் ITC ரத்னதீப 16வது ஆடம்பர ஹோட்டலாக அமைகின்றது. ஆடம்பரமான ஹோட்டல்களில் உலகின் முன்னணி வர்த்தக நாமங்களில் ஒன்றான Marriott International நீடித்து நிலைக்கக் கூடிய பொக்கிஷமான நினைவுகளைத் தூண்டும், தனித்துவமான, உண்மையான அனுபவங்களை வழங்கும் உலகப் புகழ்பெற்ற ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளைக் கொண்டுள்ளது. ஆடம்பர வர்த்தக நாமங்கள் இலங்கைக்குள் நுழைவதை ITC ரத்னதீப குறிக்கின்றது. இந்த ஆடம்பர ஹோட்டல்கள் உலகின் மிகப்பெரிய ஹோட்டல் லோயலிட்டி திட்டத்தைக் கொண்ட Marriott Bonvoy இன் ஒரு பகுதியாகும்.
ITC ஹோட்டல்கள் பற்றி www.itchotels.in
ITC ஹோட்டல்களின் வர்த்தக நாம அனுபவச் சின்னமாக Namaste உடன், 80 இடங்களில் 130 ஆதனங்களைக் கொண்ட இந்தியாவின் முன்னணி ஆடம்பர ஹோட்டல்களைக் கொண்ட பாரியதொரு வணிகச் சங்கிலியாகும். ஒவ்வொரு இடத்தின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் வகையில், இந்தியாவின் விருந்தோம்பல் பாரம்பரியத்தை ITC ஹோட்டல்கள் உலகளாவிய அளவுகோல்களுடன் ஒருங்கிணைக்கின்றன. ITC ஹோட்டல் குழுமம் ஆறு பிரம்மாண்ட வர்த்தக நாமங்களின் கீழ் செயற்படுகின்றன. இதற்கமைய ஆடம்பரமான இடங்களாக ITC Hotel மற்றும் Mementos ஆகியன காணப்படுவதுடன், பிரீமியம் பிரிவில் Storii வர்த்தக நாமமும், மேல் மட்டத்திலிருந்து மேல்தட்டு மட்டம் வரையில் Welcomhotel ஆகியனவும், நடுத்தரப் பிரிவில் Fortune ஆகியனவும், ஹெரிட்டேஜ் பொழுதுபோக்கிற்கு WelcomHeritage ஆகியனவும் காணப்படுகின்றன. ‘பொறுப்பவாய்ந்த ஆடம்பரம்’ என்ற வாழிகாட்டலின் கீழ் தசாப்தத்துக்கு மேலாக ITC ஹோட்டல்கள் நிலைபேறான நடைமுறைகளின் ஊடாக ஆடரம்பர அனுபவத்தை வழங்க உறுதியுடன் செயற்பட்டு வருகின்றன. இதன் அனைத்து ஆடம்பர ஹோட்டல்களும் தரப்படுத்தலைப் LEED*® Platinum பெற்றிருப்பதுடன், உலகின் ‘பசுமையான’ ஆடம்பர ஹோட்டல் சங்கிலிகளில் ஒன்றாகவும் இவை திகழ்கின்றன. எரிசக்தி நுகர்வின்போது கார்பன் வெளியேற்றம் இல்லாத உலகின் முதல் 12 ஆதனங்களில் ஒன்றாகவும், பூச்சிய குடிநீர் பயன்பாட்டு சமநிலையைக் கொண்ட முதல் 4 ஆதனங்களில் ஒன்றாகவும் ITC ஹோட்டல்கள் சான்றிதழ் பெற்றுள்ளன. (எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்புக்கான தலைமைத்துவம் – அமெரிக்க பசுமைக் கட்டட கவுன்சில் மற்றும் இந்திய பசுபை கட்டட கவுன்சில்)









































Discussion about this post