ஜோன் கீல்ஸ் குழுமத்தின் ஒக்டேவ், கொழும்பு பல்கலைக்கழகத்துடன் தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வுக் கல்வியை இயக்குவதில் இணைசேர்ந்துள்ளது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தரவு மற்றும் மேம்பட்ட பகுப்பாய்வு மையமான ஒக்டேவ் (OCTAVE), 2024 ஆகஸ்ட் 15 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் புள்ளிவிபரவியல் துறையுடன் தனது ஒருங்கிணைப்பை அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் கிருஷான் பாலேந்திரா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் எச். டி. கருணாரத்ன ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்த வெற்றிகரமான ஒருங்கிணைவுடன் மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்துடனான ஒருங்கிணைவு, ஒக்டேவ் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த ஒருங்கிணைவு மூலம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரவு பகுப்பாய்வு பாடத்தொகுப்பை மேம்படுத்த ஒக்டேவ் உதவும். தரவு அறிவியல் (Data Science), இயந்திர கற்றல் (Machine Learning) மற்றும் தரவு பொறியியல் (Data Engineering) போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படும். தொழில்துறையின் சிறந்த நடைமுறைகள் மற்றும் சமீப முன்னேற்றங்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு அதிநவீன அறிவை வழங்குவதை ஒக்டேவ் நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், ஒக்டேவின் அனுபவமிக்க வல்லுநர்கள் இறுதியாண்டு செயற்றிட்டங்களுக்கு மேற்பார்வையாளர்களாகவும், கௌரவ விரிவுரையாளர்களாகவும் பணியாற்றுவதுடன் அவர்களின் நிபுணத்துவ அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
மேலும், பல்கலைக்கழகத்தின் திறமையான மற்றும் ஊக்கமுள்ள மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (Internship) வாய்ப்புகளை வழங்க ஒக்டேவ் தீர்மானித்துள்ளது. இந்த இன்டர்ன்ஷிப், மாணவர்களுக்கு தரவு அறிவியல் (Data Science), இயந்திர கற்றல் (Machine Learning), தரவு பொறியியல் (Data Engineering), BI பொறியியல் (BI Engineering), திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றில் நடைமுறை திறன்களைப் பெற உதவும்.
மேலும், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தொழில் கண்காட்சிகளில் ஒக்டேவ் பங்கேற்பதன் மூலம் மாணவர்களுக்கு தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் வேலைவாய்ப்புகள் குறித்த பார்வையை வழங்கும். இத்துறையில் இலங்கையில் உள்ள வாய்ப்புகளை மாணவர்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம், திறமை தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, உள்நாட்டில் சாத்தியமான வாய்ப்புகளை வழங்க முடியும் என்று ஒக்டேவ் நம்புகிறது. பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் தனது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இலங்கையில் தரவுப் பகுப்பாய்வுத் துறையை முன்னேற்றுதல் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதை ஒக்டேவ் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
இந்த ஒருங்கிணைவு இலங்கையில் தரவு பகுப்பாய்வு சமூகத்தை வளர்க்கும் அதே வேளையில் எதிர்கால தலைமுறையில் தரவு மற்றும் பகுப்பாய்வு நிபுணர்களை வளர்ப்பதில் ஒக்டேவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் கவனம் செலுத்தும் ஆறு பகுதிகளில் ஆரோக்கியமும் ஒன்றாகும் – ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி இதழால் கடந்த 19 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே.கே.எச், ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ என்பதை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினைய
ூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.









































Discussion about this post