வெள்ளி விழாவின் மகிழ்ச்சியுடன் இணைந்ததாக கல்விக்கு வழங்கிய சிறந்த பங்களிப்பைக் கொண்டாடிய SLIIT விருதுகள் இரவு 2024
SLIIT நிறுவனம் தனது பணியாளர்களின் சிறப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தலைசிறந்த பங்களிப்பைக் கொண்டாடும் வகையில் வருடாந்தம் நடத்தும் SLIIT விருதுகள் 2024 இரவு நிகழ்வை அண்மையில் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. கல்வி மற்றும் புதுமை தொடர்பான 25வது வருடப் பயணக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக அமைந்த இந்த விருதுகள் நிகழ்வில் 500ற்கும் அதிகமான SLIIT பணியாளர் சமூகத்தினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
2023ஆம் ஆண்டில் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாள்ரகளின் தலைசிறந்த சாதனைகளுக்காக செயல்திறன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக அமைந்தது. SLIIT இன் கல்விசார் அனுபவத்தை அதிகரிக்கச் செய்து, அடுத்த தலைமுறை தொழில்சார் நிபுணர்களை வளப்படுத்தி, கல்வியின் சிறப்பில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீள்உறுதிப்படுத்துவதற்காகப் பாடுபட்ட தனிநபர்களின் அர்ப்பணிப்பு மற்றும் புதுமையைப் பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதினைப் பெற்றுக் கொண்ட கல்விசார் பணியாளர்கள் வருமாறு :
பிரிவு ஏ
தலைசிறந்த ஆசிரியர் விருது
• வெற்றியாளர் : Ms . வந்தனா துன்வில, விரிவுரையாளர் (), SLIIT வணிகப் பிரிவு
• மெரிட் விருது : திரு.ஷனித மிரிஹான, விரிவுரையாளர் (), மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடம்
வருடந்தின் சிறந்த ஆய்வாளர் விருது
• வெற்றியாளர் : Ms. மதாரா ஜயநெத்தி, விரிவுரையாளர் (), மனிதநேயம் மற்றும் விஞ்ஞானபீடம்
• மெரிட் விருது : Ms . கீத்மா பத்திரண (), SLIIT வணிகப் பிரிவு
சிறந்த ஒட்டுமொத்த சாதனை விருது
வெற்றியாளர் : திரு. இஷார கமகே, சிரேஷ்ட விரிவுரையாளர், கணினி பீடம்
பிரிவு பி
தலைசிறந்த ஆசிரியர் விருது
• வெற்றியாளர் : கலாநிதி. கோபிதாஸ் தர்மராஜா, இணை பீடாதிபதி, பொறியியல் பீடம்
• மெரிட் விருது : Ms .அஞ்சலி கமகே, சிரேஷ்ட விரிவுரையாளர், கணினி பீடம்
வருடந்தின் சிறந்த ஆய்வாளர் விருது
• வெற்றியாளர் : பேராசிரியர். சரித ஜயருக், இணை பேராசிரியர், மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடம்
• மெரிட் விருது : பேராசிரியர். அநுராதா ஜயகொடி, கணினி பீடத்தின் இணைப் பேராசிரியர்/கணினி கட்டமைப்பு பொறியியல் திணைக்களத்தின் தலைவர்
சிறந்த ஒட்டுமொத்த சாதனை விருது
• வெற்றியாளர் : பேராசிரியர். சரித ஜயருக், இணை பேராசிரியர், மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடம்
பிரிவு சி
தலைசிறந்த ஆசிரியர் விருது
• வெற்றியாளர் : பேராசிரியர். மிகார லியனகே, இயந்திரப் பொறியியல் திணைக்களத்தின் தலைவர்/பொறியியல் பீடத்தின் பேராசிரியர்
• மெரிட் விருது : பேராசிரியர். ருவான் ஜயதிலக, தகவல் முகாமைத்துவ திணைக்களத்தின் தலைவர்/ SLIIT வணிகப் பிரிவின் பேராசிரியர்
வருடந்தின் சிறந்த ஆய்வாளர் விருது
• வெற்றியாளர் : பேராசிரியர். ருவான் ஜயதிலக, தகவல் முகாமைத்துவ திணைக்களத்தின் தலைவர்/ SLIIT வணிகப் பிரிவின் பேராசிரியர்
• மெரிட் விருது : பேராசிரியர். ஷிரோமி கருணாரத்ன, பொறியியல் பீடத்தின் பேராசிரியர்
சிறந்த ஒட்டுமொத்த சாதனை விருது
• வெற்றியாளர் : பேராசிரியர். அயந்த கோமஸ், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி
இந்த மூன்று பிரிவுகளின் கீழ் கல்விசாரா பணியாளர்களும் தமது சிறந்த பங்களிப்புக்காக விருதுவழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
பிரிவு ஏ
சிறந்த செயற்பாட்டாளருக்கான விருது
• வெற்றியாளர் : திரு.சுதர்ஷன சந்ரமால், வசதிகள் முகாமைத்துவத் திணைக்களம்
• மெரிட் விருது 1 : திரு.சஞ்ஜீவ ரணசிங்க, நிர்வாகத் திணைக்களம்
• மெரிட் விருது 2 : திரு.ஷிவந்த கமகே, நிர்வாகத் திணைக்களம்
பிரிவு பி
சிறந்த செயற்பாட்டாளருக்கான விருது
• வெற்றியாளர் : திரு.சந்துன் வீரசிங்க நிறைவேற்று (தரம் II) நூலகர்
• மெரிட் விருது 1 : திரு.பத்தும் உடவத்த, வசதிகள் முகாமைத்துவம் நிறைவேற்றதிகாரி (தரம் II), பொறியியல் பீடம்
• மெரிட் விருது 2 : திரு.சிசிர லியனகே நிறைவேற்று அதிகாரி (தரம் II) SLIIT வணிகப் பிரிவு
பிரிவு சி
சிறந்த செயற்பாட்டாளருக்கான விருது
• வெற்றியாளர் : திரு.ரங்க அத்தபத்து, சிரேஷ்ட மென்பொருள் பொறியியலாளர், வணிக செயலிகள் மற்றும் ஒத்துழைப்பு சேவைகள், தகவல் தொழில்நுட்பத் திணைக்களம்
• மெரிட் விருது 1 : திரு.திரஞ்ஜய மீகஸ்தெனிய, முகாமையாளர்ஃசந்தைப்படுத்தல்- மாணவர் சேவை மற்றும் வெளிக்கள திணைக்களம்
• மெரிட் விருது 2 : Ms .உத்பலா ரணசிங்க, முகாமையாளர், மனிதநேயம மற்றும் விஞ்ஞான
பீடம்
இந்த இனிய மாலை நிகழ்வில் 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நிறுவனத்திற்காக நீண்டகாலம் அதாவது 10 முதல் 25 வருட சேவையைப் பூர்த்திசெய்த பணியாளர்களின் அர்ப்பணிப்பும் அங்கீகரிக்கப்பட்டது. SLIIT இன் சிறந்த பயணத்தில் ஓர் அங்கமாகவிருந்த இவர்களின் அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாக இந்து விருது அமைந்தது.
ஆரம்ப காலகட்டங்களில் நிறுவனத்தை வழிப்படுத்துவதில் தொலைநோக்கு சிந்தனையுடன் செயற்பட்ட நபர்களுக்கு விசேட அங்கீகரா விருதுகள் வழங்கப்பட்டன. SLIIT இன் வலுவான நிறுவனக் கட்டமைப்புக்கு எப்பொழுதும் பக்கபலமாக இருந்து அர்ப்பணிப்பான சேவையையும், மூலோபாய வழிகாட்டலையும் வழங்கிவரும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கண்கவர் நடன நிகழ்வுகள், ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பெறுமதியான பரிசுகளுக்கான அதிஷ்டலாபச் சீட்டுழுப்பு, நேரடியான இசை நிகழ்வு என்பன பங்குபற்றியவர்களை மகிழ்வித்திருந்தன.
பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் இணையற்ற அர்ப்பணிப்பு, வளர்ச்சி மற்றும் வெற்றியினாலேயே SLIIT இன் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுமை மற்றும் ஊக்குவிப்புக்களைத் தொடரும் நிறுவனம் என்ற ரீதியில், வெள்ளிவிழாவைக் கொண்டாடும் இந்தப் பயணமானது கல்வியின் மூலம் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நீடித்த தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பை நினைவூட்டும் வகையில் அமைகின்றது.





































Discussion about this post