புத்தம் புதிய சிறப்புப் பட்டக்கல்வி தொடர்பில் SLIIT இன் அறிவிப்பு – செயற்கை நுண்ணறிவில் இளவிஞ்ஞானமானி (BSc )
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT ) புத்தம் புதிய சிறப்புப் பட்டக்கல்வியான செயற்கை நுண்ணறிவில் இளவிஞ்ஞானமானிப் பட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பட்டக் கல்வியானது இலங்கையின் உயர் கல்வித் துறையில், குறிப்பாக அரசசார்பற்ற பல்கலைக்கழகம் என்ற ரீதியில் SLIIT நிறுவனத்துக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது.
கல்வி மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கத்தின் எதிர்காலமாக செயற்கை நுண்ணறிவு அடையாளம் காணப்பட்டிருப்பதால், அதிரடியான தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ற வகையில் குறித்த துறையில் நிபுணர்களுக்கு அதிகரித்துள்ள கேள்வியைக் கருத்தில் கொண்டு நான்கு வருட செயற்கை நுண்ணறிவில் இளவிஞ்ஞானமானி (சிறப்பு) பட்டக் கல்வியை SLIIT வடிவமைத்துள்ளது. சிறந்த நடைமுறை அனுபவத்துடன் பரந்துபட்ட தத்துவார்த்த அறிவை வழங்கக் கூடியதாக அமைந்துள்ள இந்தப் பட்டக் கல்வியின் இறுதி ஆண்டில் ஆய்வுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தகவல் ஆய்வு, நரம்பியல் வலையமைப்புக்கள் மற்றும் அறிவார்ந்த அமைப்புகள் போன்ற அதிநவீன பகுதிகளை வலியுறுத்துவது போன்ற விரிவான பாடத்திட்டத்தினால் இப்பட்டம் தனித்து நிற்பதுடன், இதன் மூலம் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றி மாணவர்கள் நன்கு அறிந்திருப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. கல்வியியல் சிறப்பில் உறுதியான கவனத்தைச் செலுத்தும் அதேநேரம், நிஜ உலகின் சவால்களுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் இப்பட்டக் கல்வியானது நடைமுறைப் பயிற்சிகள் மற்றும் தொழில்துறை சான்றிதழ்படுத்தல்களையும் உள்ளடக்கியுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தப் பட்டமானது திறன்சார்ந்த தொழில்சார் நிபுணர்களை உருவாக்குவதற்காக பரந்தளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள SLIIT இன் உயர்கல்வித் தரத்தை உறுதிப்படுத்தும்.
இந்தப் பட்டத்தைப் பூர்த்திசெய்யும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்பு, தகவல் விஞ்ஞானம், ரொபோர்ட்டிக்ஸ், இயந்திரக் கற்கைப் பொறியியல் போன்ற முன்னணியான துறைகளில் சிறந்த வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு மற்றும் நிபுணத்துவத்தில் இலங்கையை கேந்திர நிலையமாக மாற்றும் அதேநேரம், தொழில்நுட்பத் துறையில் வளர்ந்துவரும் தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய முற்போக்கான சிந்தனையைக் கொண்ட கல்வியை SLIIT வழங்குவதை இந்த முயற்சி மீளவும் உறுதிப்படுத்துகின்றது.
இன் கணினி பீடத்தின் சார்பு துணை வேந்தர் பேராசிரியர் நுவன் கொடகொட கருத்துத் தெரிவிக்கையில், “புதிய செயற்கை நுண்ணறிவுப் பட்டத்தின் அறிமுகமானது இலங்கையின் கல்வித் துறையில் முக்கியமானதோரு தருணத்தைக் குறிப்பதுடன், அனைத்து மாணவர்களுக்கும் பட்டப்படிப்பை மிகவும் அணுகக்கூடியதாக மாற்றுகின்றது. அனைத்துத் தொழில்துறையிலும் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக செயற்கை நுண்ணறிவை SLIIT அடையாளம் கண்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்களை உந்துதல் மற்றும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவுப் பரப்பில் இலங்கையின் நிலைக்கு பங்களிக்கும் திறன் கொண்ட இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற எங்கள் மாணவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக நாங்கள் நம்புகிறோம்.
இந்தப் பட்டத்தைத் தொடர்வதற்கு உயர்தரப் பரீட்சையில் எந்தத் துறையாக இருந்தாலும் ஒரே அமர்வில் 3 சித்திகள் அவசியமாகும்.
இந்தப் பட்டம் தொடர்பிலும், அனுமதி தொடர்பிலும் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள SLIIT இன் இணையத்தளத்துக்கு விஜயம் செய்யவும் அல்லது +94 11 754 4801 என்ற தொலைபேசி இலக்கத்தில் அல்லது info@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.






































Discussion about this post