சியபத பினான்ஸ், அம்பலாங்கொடையில் 55வது கிளையைத் திறப்பதன் மூலமாக, நாடு முழுவதற்குமான தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது
இலங்கையின் வங்கி சாரா நிதித் துறையில் முன்னணி நிறுவனமும், சம்பத் வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமுமான சியபத பினான்ஸ் பிஎல்சி, அம்பலாங்கொடையில், காலி வீதி இல. 29 இல் அதன் 55வது கிளையை திறப்பதாக அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து சமூகத்தினரும் அணுகக்கூடிய, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதி தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டின் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்தத் திறப்பு விழாவில் சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன, பணிப்பாளர்கள் திரு.ஜயநாத் குணவர்தன, திருமதி.சிறியாணி ரணதுங்க, தலைமை செயற்பாட்டு அதிகாரி திரு. ராஜீவ் டி சில்வா, சிரேஸ்ட நிர்வாக உறுப்பினர்கள், அம்பலாங்கொடை பிரதேச செயலாளர் திருமதி. ஹசந்தி நிரோசினி, நகர சபையின் செயலாளர், அம்பலாங்கொடை பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.ரணவீர, வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.சரத் டிசில்வா, கிராம சேவகர் திரு.ஹன்ச குமார டிசில்வா, பொது மற்றும் தனியார் வங்கி, காப்புறுதி மற்றும் நிதித் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையின் தெற்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள அம்பலாங்கொடை, காலி மாவட்டத்தில் உள்ள ஒரு செயலாற்றல் மிகுந்த நகரமாகும், இது அதன் கலாசார செழுமை, முகமூடி தயாரிக்கும் மரபுகள், வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித் தொழில்களுக்கு பெயர் பெற்றது. 61,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன், பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கும் 15-64 வயதுக்கிடைப்பட்ட 65.7% துடிப்பான பணியாளர்களைக் கொண்ட இந்த நகரம், நிதி சேவைகளுக்கான அதிக சாத்தியத்தையுடைய சந்தையாக விளங்குகிறது.
‘அம்பலாங்கொடை பன்முகத்தன்மை கொண்ட பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்குகிறது’ என்று சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆனந்த செனவிரத்ன கூறினார். மேலும் ‘எங்கள் அம்பலாங்கொடை கிளையை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த பிராந்தியத்தில் நிதி அணுகல் இடைவெளியைக் குறைப்பதற்கும், தனிநபர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிக்கும் வகையில் தனிப்பயனாக்கப்பட்ட, நெகிழ்வான தீர்வுகளை வழங்குவதற்கும் நாங்கள் தீர்மானித்துள்ளோம்.’ என்று குறிப்பிட்டார்.
சியபத பினான்ஸின் புதிய அம்பலாங்கொடை கிளை, பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட விரிவான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொண்டுள்ளது. குத்தகை தீர்வுகள், நிலையான வைப்பு, தங்கக்கடன், வணிக மற்றும் தனிப்பட்ட கடன்கள் இதில் அடங்கும். வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் பே விலைப்பட்டியல் செலுத்தும் வசதியுடன், விரைவான வரைவு மற்றும் காரணி சேவைகளையும் வழங்கும்.
சேவைத் துறையில் 43.3% பங்களிப்பு விவசாயம் மற்றும் தொழில்துறைகள் ஊடாகக் கிடைக்கின்றன. நகரத்தின் பொருளாதார அமைப்பு அணுகக்கூடிய வகையிலான, புத்தாக்கமான நிதித் தெரிவுகளைக் கோருகிறது. SME கடன்கள், மீன்பிடி உபகரணங்களுக்கான குத்தகை வசதிகள், தனிநபர் மற்றும் வணிகக் கடன்கள், நிலையான சுற்றுலா மற்றும் விவசாயத்திற்கான பசுமை நிதி போன்ற சேவைகள் மூலம் உள்ளுர் வளர்ச்சியை ஆதரிக்க சியபத பினான்ஸ் தனித்துவமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்துடன், சியபத பினான்ஸ் நிறுவனம் அதன் வலையமைப்பில் உள்ள 32 கிலோமீட்டர் புவியியல் இடைவெளியை நிவர்த்தி செய்து, அதன் நாடு முழுவதற்குமான வாடிக்கையாளர் வசதிக்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
கிளை திறப்புடன் இணைந்து, சியபத பினான்ஸ் நிறுவனம் ‘சியபதேன் மிகிகதட்ட’ என்ற கூட்டுறவு சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஒரு சமூக ஈடுபாட்டு முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சியில் அம்பலாங்கொடை, சீனிகம, ஸ்ரீ அபயதிஸ்ஸ வித்தியாலயத்திற்கு கணனி மற்றும் கருவிகள் நன்கொடையுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அம்பலாங்கொடையில் மரம் நடும் பிரச்சாரமும் இடம்பெற்றது. இந்த முயற்சி எழுத்தறிவு திறன்களை மேம்படுத்துவதையும், அப்பகுதியில் உள்ள பின்தங்கிய மாணவர்களுக்கான கல்விக்கான அணுகலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் சியபத பினான்ஸ் நிறுவனம் தான் சேவை செய்யும் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் நிலையான வளர்ச்சி இலக்குகளை ஆதரிப்பதற்கும் பரந்த அர்ப்பணிப்பை வழங்குவதை பிரதிபலிக்கின்றன.
சியபத பினான்ஸ் பிஎல்சி பற்றி:
சம்பத் வங்கி குழுமத்தின் முழுமையான உரிமம் கொண்ட சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் 55 கிளைகளைக் கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ளது, இதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்குகின்றன. பிட்ச் மதிப்பீடுகளில் ‘A(lka)’ என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சிப் பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் முயற்சிகளின் வளர்ச்சிக்கும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.
இலக்கம் 0917605235 வழியாக சியபத பினான்ஸ் அம்பலாங்கொடை கிளையைத் தொடர்பு கொள்ள முடியும். அல்லது இல 29, காலி வீதி, அம்பலாங்கொடை என்ற முகவரியில் கிளை அமைந்துள்ளது. சியபத பினான்ஸ் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.siyapatha.lk ஐப் பார்வையிடவும்.
ஊடக தொடர்பு :
பெயர்;/பதவி: சம்பிகா தல்கொடபிட்டிய
முகாமையாளர் – வர்த்தக நாமம் மற்றும் தொடர்பாடல்
தொலைபேசி எண்: 0773 856 757
மின்னஞ்சல் முகவரி: champikat@siyapatha.lk





































Discussion about this post