ஊடக வெளியீடு
உடனடி வெளியீட்டுக்காக
சியபத பினான்ஸ் பிஎல்சி, வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், 4 பில்லியன் ரூபாய் கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது.
சம்பத் வங்கி பிஎல்சியின் துணை நிறுவனமும், இலங்கையின் வங்கி அல்லாத நிதித்துறையில் புகழ்பெற்று விளங்கும் முன்னணி நிறுவனமுமான சியபத பினான்ஸ் பிஎல்சி, தனது கடனீட்டுப் பத்திர வெளியீட்டின் மூலம் 4 பில்லியன் ரூபாவை திரட்டுவதற்கான முடிவை இன்று அறிவித்துள்ளது.
2024 மார்ச் 6 அன்று, பட்டியலிடப்பட்ட, மதிப்பிடப்பட்ட, சிரேஷ்ட, பாதுகாப்பற்ற, மீட்டெடுக்கக்கூடிய கடனீட்டுப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம,; நிதி திரட்டும் முடிவை சியபத பினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கீகரித்துள்ளது. ஆரம்ப சலுகையாக ரூ. 2 பில்லியன், மேலதிகமாக ரூ. 2 பில்லியனுடன் மொத்த சாத்தியமான வெளியீடு ரூ. 4 பில்லியன ஆகும்;. இந்த கடன் பத்திரங்கள் ஐந்தாண்டு காலத்துடன், முதலீட்டாளர்களுக்கு நிலையான வட்டி வீதத்தில் வருடாந்தம் வழங்கத் தயாராக உள்ளது.
இந்த வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம், சியபத பினான்ஸ் பிஎல்சியின கடன் பிரிவை விரிவுபடுத்துவதற்காக ஒதுக்கப்படுகிறது, இது நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப நிலையான வளர்ச்சி மற்றும் மூலோபாய முதலீட்டு வாய்ப்புகளை வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஆனந்த செனவிரத்ன “சியபத பினான்ஸ் பிஎல்சி இலங்கையில் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதால், எங்களின் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான மற்றும் நிலையான நிதித் தீர்வுகளை தொடர்ந்து வழங்குவதற்கு இது உதவும் என நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார்.
2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் (ஊடீளுடு) நெறிப்படுத்தப்பட்ட சியபத பினான்ஸ் பிஎல்சி, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளுக்காகவும் சிறந்த அர்ப்பணிப்புக்காகவும், புகழ்பெற்ற ஒரு முதன்மையான நிதி நிறுவனமாக நற்பெயரைப் பெற்றுள்ளது. 900 க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களைக் கொண்ட அர்ப்பணிப்புள்ள குழுவுடன், நிறுவனம் முக்கிய நகர்ப்புற மையங்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 48 கிளைகளை உள்ளடக்கியதாக அதன் தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொழும்பு பங்குச் சந்தையில் (ஊளுநு) பட்டியலிடப்பட்ட நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி;, சம்பத் வங்கியின் மிகப் பெரிய துணை நிறுவனமாக வேகமாக முன்னேறியுள்ளது. அதன் மாறுபட்ட போர்ட்ஃபோலியோ நிதி குத்தகை, கடன்கள், தங்க நிதியுதவி, சுழல் கடன்கள், காரணியாக்கம் மற்றும் பிற நிதி சேவைகளின் வரிசையை உள்ளடக்கியது. குவைஉh தரப்படுத்தல் சியபத பினான்ஸ் பிஎல்சியின் தேசிய நீண்ட கால மதிப்பீட்டை டீடீடீூ (டமய) இல் நிலையான கண்ணோட்டத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது. இது உறுதியான வளர்ச்சிப் பாதையுடன் நிறுவனத்தின் உறுதியான நிதி நிலையை அங்கீகரித்துள்ளது.
-முடிவு-
ஊடக தொடர்பு:
பெயர்: சம்பிகா தல்கொடபிடிய
பதவி: முகாமையாளர் -மக்கள் தொடர்புத்துறை
கையடக்க தொ.பே.இல: 0773 856 757
மின்னஞ்சல் முகவரி: உhயஅpமையவ;ளலையியவாய.டம





































Discussion about this post