சியபத பினான்ஸ், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை நகரில் தனது புதிய கிளையை திறந்துள்ளது
உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, சமீபத்தில் தனது முழுமையான சேவைகளை பண்டைய விவசாய மையமான மஹியங்கனைக்கு விரிவுபடுத்தி, அதன் 56வது கிளையை வெற்றிகரமாக திறந்துள்ளது.
தனது பங்குதாரர்களுக்கு பொருத்தமான மதிப்பை வழங்குவதற்கான நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போகும்; வகையில், புதிய கிளை, குத்தகை, நிலையான வைப்புத்தொகை, சேமிப்பு, தங்க நிதி, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவு வரைவு மற்றும் தரகுச் சேவை முதல் ஸ்மார்ட் பே வசதி வரை பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்குகிறது, இது பிராந்தியத்தில் ஒரு ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குகிறது.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த செனவிரத்ன அவர்களால், சியபத பினான்ஸ் பிஎல்சியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ராஜீவ் டி சில்வா, சிரேஷ்ட நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் மற்றும் மஹியங்கனை பிரதேச செயலாளர் மஹியங்கனை பிரதேச செயலாளர் திரு. விமன்ச செனவிரத்ன, பொலிஸ் பரிசோதகர் திரு. பி.எஸ்.கே. டி சில்வா, கிராம உத்தியோகத்தர் திரு. ஆர்.என்.எஸ். ரணவக்க, வர்த்தக சங்க தலைவர் திரு.சரத் மஹிந்த குமார, அரசு மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் நலன் விரும்பிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
பசுமைமிகு, இயற்கை அழகு, மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த கலவையால் அலங்கரிக்கப்பட்ட மஹியங்கனை, பதுளை மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது.
பண்டைய பாலி மொழியிலிருந்து பெறப்பட்ட இந்த பெயர் “தட்டையான நிலம்” என்று பொருள்படும், இது கண்டியிலிருந்து பதியதலாவ வரை செல்லும் சாலையின் குறிப்பிடத்தக்க தட்டையான தன்மையையும், ஹ{ன்னஸ்கிரிய வழியாக “தஹா அட்ட வங்குவ” என்று பிரபலமாக அறியப்படும் 18 கொண்டை ஊசி வளைவுகளையும் குறிக்கிறது.
இலங்கையின் மிக நீளமான நதியான மகாவலி நதிக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த சமூகத்தின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்வாதாரம் அதன் பாரம்பரிய விவசாய நடைமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது, அங்கு பெரும்பான்மையான 52.30% சுறுசுறுப்பான பணியாளர்கள் நெல் விளைச்சலில் ஈடுபட்டுள்ளனர். பல தசாப்தங்களாக, மகாவலி மேம்பாட்டுத் திட்டம், உள்;ர்வாசிகள் முன்னர் அடைய முடியாத வாய்ப்புகளை பயன்படுத்தி விவசாயத் துறையில் அதிக முன்னேற்றம் காண வழிவகுக்கிறது.
தற்போது, மஹியங்கனையின் ஒட்டுமொத்த பொருளாதார நிலப்பரப்பு, 15 முதல் 64 வயதுக்குட்பட்ட பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான வயதுடையவர்களை கொண்டதால், முதன்மையாக விவசாயம், சேவைகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் தனிநபர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ((SMEs) ஆகியவற்றை உள்ளடக்கியது, இது நன்கு நிறுவப்பட்ட நிதி ஆதரவின் அவசியத்தைக் குறிக்கிறது.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குநர் திரு. ஆனந்த செனவிரத்ன திறப்பு விழாவில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் போது, “56வது சியபத பினான்ஸ் கிளையை திறப்பதற்காக நாங்கள் இங்கு கூடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மஹியங்கனை பற்றி எவரும் கவனிக்கக்கூடிய முதல் அம்சங்களில் ஒன்று சமூகம்.
பிராந்தியத்தின் உயர் பொருளாதார வளர்ச்சித் திறனை குறிப்பிடுவது அவசியம் என்றாலும், மஹியங்கனையின் வளமான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மரபுகளை சமூகம் எவ்வாறு மதிக்கிறது என்பதை காண்பதும் ஊக்கமளிக்கிறது. நம்பகமான மற்றும நெகிழ்வான நிதி உதவியுடன் மஹியங்கனை மாவட்டத்தின் முன்னணி இடங்களில் ஒன்றாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது.” எனக் கூறினார்
.
“சியபதேன் மிஹின்கத்தட” நிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்திற்கு இணங்க, சியபத பினான்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகத்தினர் பதுளை மாவட்டத்தில் உள்ள சொரபொர வேவ மகா வித்தியாலயத்தில் மரம் நடும் திட்டத்தை மேற்கொண்டனர். அத்துடன் பள்ளிகளில் டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கணினிகள் மற்றும் துணைக்கருவிகளை நன்கொடையாக வழங்கினர்.
சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமம் பெற்ற துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் கிளைகளின் வலையமைப்பை கொண்டுள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கல் தரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது.
ஃபிட்ச் மதிப்பீடுகளால் நிலையான செயற்பாடுகள்; மூலம் ‘A(lka)’ என்ற தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிறுவனம் பெற்றுள்ளது, இது உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சி பாதையை பிரதிபலிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில், சியபத பினான்ஸ் பிஎல்சி சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், நாடு முழுவதும் தனிப்பட்ட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.
புதிய கிளையை தொடர்பு கொள்ள, 055 760 5005 என்ற இலக்கத்திற்கு அழைக்கவும் அல்லது இல. 08, பதியதலாவ சாலை, மஹியங்கனை என்ற முகவரியில் உள்ள கிளைக்கு வாருங்கள். சியபத பினான்ஸ் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, www.siyapatha.lk இற்கு விஜயம் செய்யுங்கள்.





































Discussion about this post